யாடல் ஆடும் புணர்ப்பின் அவர்
- காமக்குறிப்பில்லாத விளையாட்டைச்
செய்கின்ற ஆயத்தினையுடைய அக் கன்னி மகளிர், அவர் தாய் அருகா
நின்று தவத் தைந்நீர் ஆடுதல் - அவரவர் தாயர் பக்கத்தே நின்று
நோன்புடைய இத் தைந்நீராடலை நின்னிடத்தே பெற்றது, எரி தீப்பாலும்
செறிதவம் முன்பற்றியோ - இங்ஙனம் நீர்க்கண் நின்றன்றி எரியாநின்ற
தீயின் பக்கத்திலே நின்று பொறிபுலன்களை அடக்கிச் செய்தற்குரிய
தவத்தினைப் பண்டைப் பிறப்புக்களினும் மேற்கொண்டாற்றினமையாலோ,
வையைநதி நீ உரைத்தி - வையைநதியே இப் பேற்றிற்குரிய காரணத்தை
நீயே கூறுவாயாக;
(வி-ம்.) மையாடல் - மையோலை பிடித்தல். அஃதாவது,
மை
தடவப்பெற்ற நெடுங்கணக்கு முதலிய சுவடிகளைக் கையிலேந்திப்
பயிலுதல். இங்ஙனம் முதன்முதலாகச் சுவடிபிடித்தலை மையாடல் என்று
பண்டையோர் வழங்கினர் என்றுணர்க. மை ஆகுபெயர். மையோலை
ஓலையின்கண்ணுள்ள எழுத்துக்கள் விளங்கித் தோன்றும்படி சுவடியில்
மைபூசுதலைச் செய்தலின் மையாடல் எனப்பட்டதெனினுமாம்.
இக் காலத்தார் இச் சடங்கினைச் 'சுவடிதூக்குதல்' என்று வழங்குகின்றனர்.
இச் சடங்குண்மையை.
"நனந்தலை உலகின் மிக்க நன்னுதன் மகளிர் தங்கள்
மனந்தளை பரிய நின்ற மதலைமை யாடு கென்றே"
(சீவக - 367)
எனவும்,
"ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்"
(சீவக - 2701)
எனவும் பிறசான்றோர் கூறுமாற்றானும் உணர்க.
'மழபுலவர்' என்றது கல்லி தொடங்குமளவிலுள்ள
இளமாணவர்களை. மழபுலவர்க்கு மாறெழுதலாவது, இவ்
விளமாணவரோடு கூடி அவர்க்கு மாறாக நின்று விளையாடுதல். இதனை,
"இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கயமாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையென லறியா மாயமில் ஆயமொடு
. . . . . . . . . . . . . . . . . . . . .
குளித்து மணற்கொண்ட கல்லா இளமை"
(புறநா - 243)
என வரும் புறத்தானும் உணர்க.
மறையெனலறியா மாயமில் ஆயத்தாராகலின் காமக்குறிப்பின்றியே
ஆடுதலைப் 'பொய்யாடல் ஆடும்' என்றார். புணர்ப்பு - ஆயம்: கூட்டம்.
'தீ எரிப்பாலும்' என்பதனை, 'எரிதீப்பாலும்' என மாறுக. உம்மை எச்ச |
|
|
|