ஆறு உய்ப்ப - தான் விரும்பிய
வழியே அவனை ஈர்த்துச் செல்லாநிற்ப,
ஆயத்துடன் நில்லாள் அவன்பின் ஆங்குத் தொடரூஉ - அதுகண்ட
அப் பெண் அப் பிரிவினை ஆற்றாதவளாய் ஆயமகளிரோடே
நில்லாமல் அவன் பின்னே தொடரா நிற்ப, அத் திறம் தாய் அறியாள்
- அவள் அங்ஙனம் செல்லுதற்குக் காரணமான அன்பின் தன்மையை
அவள் தாய் அறியாதவளாய், தாங்கித் தனிச்சேறல் - அவளைத் தடுத்து
ஏடி நீ தனியே செல்லாதே கொள், ஆயத்தில் கூடு என்று - மீண்டு நின்
ஆயமகளிரோடே சென்று கூடுவாயாக என்று கூறி விலக்குதலானே,
அரற்றெடுப்ப - அப் பெண் அழும்படி, தாக்கிற்று கார் சேயுற்ற நீர்வரவு
- கரையினை மோதி வந்தது கார்ப்பருவத்துச் சிவந்த நிறமுடைய வையை
நீரினது வரவு;
(வி-ம்.) தண்டு - வாழைத்தண்டு. தழுவா - தழுவி.
நெஞ்சம்
அவள்பாற் சென்றமையானே கைசோர என்றவாறு. நீர் அவன் தாழ்வுழி
உய்யாது தான் வேண்டுமாறுய்ப்ப என்புழி நகைச்சுவை தோன்றுதலுணர்க.
தொடரூஉ என்னும் செய்யூவெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக.
அத்திறம் - அதற்குக் காரணமான அன்பின்றன்மை. தாங்கி - தடுத்து.
சேறல்: முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று; செல்லாதே கூடென்று
என்புழி, என்றென்பதனை எனவெனெச்சமாகக் கொள்க. அரற்று -
அழுகை. கார் - கார்ப்பருவம். சேயுற்ற - செந்நிறமுடைய.
115 - 121: நீதக்காய் . . . . . . .மன்னுகவென்மாரும்
(இ-ள்.) தைந்நீர் நிறம் தெளிந்தாய் நீ தக்காய்
என்மாரும் - அக்
கார்ப்பருவத்து நீர்போலன்றித் தைந்நீரே நீ யாம் ஆடும்
அளவினையுடையையாய் மேலும் நிறமும் தெளிந்துள்ளனை ஆகலான் நீ
தக்காய் என்று பாராட்டுவாரும், காதலர் கழுத்து அமைகை வாங்காப்
புல்ல விழுத்தகை பெறுகென வேண்டுதும் என்மாரும் - எம் கணவர்
எமது கழுத்தில் அமைத்துத் தழுவிய கைகளை அகற்றாமல் எம்மைத்
தழுவா நிற்ப அதனால் யாம் வீறு பெறுக என்று நின்னை
வேண்டுகின்றோம் அங்ஙனமாக அருள்க என்று வேண்டிக்கொள்வாரும்,
வீழ்வார் பூவீழ் அரியில் யாம் புலம்பப் போகாது ஏமம் எய்துக
என்மாரும் - எம்மால் விரும்பப்பட்ட தலைவர் மலரூதும் வண்டுபோல
யாங்கள் தனித்துவருந்தும்படி எம்மை நீத்துப் போகாமல்
எம்மோடிருத்தலானே யாம் இன்பம் எய்தும்படி அருள்வாயாக என
வேண்டிக்கொள்வாரும், கிழவர் கிழவியர் என்னாது ஏழ்காறும் மழவு
ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் - எம் கணவரும் யாமும்
கிழவர் கிழவியர் என்று உலகத்தாராற் கூறப்படாமல் எமது ஏழாம்
பருவத்திற்குரிய ஆண்டு எய்துமளவும், இப்பருவமே நிலைபெறும்படி |
|
|
|