பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்20

சுட்டினார். இளையை முதியை என்பன, முன்னிலை ஒருமை. புதையிருள்
; வினைத்தொகை. புதைத்தல் - மறைத்தல். பலதேவனுக்கு யமுனை நீல
ஆடை நல்கிற்று என்பது புராணக்கதை. பொலம் - பொன். பொற்பனை
என்க. பனைக்கொடியோன் - பலதேவன்.

      கேள்வியுள் தேரின் தெரிபொருள் நடுவாகுதலும் ஆகிய
இந்நிலையும் என மாறி ஆக்கச் சொல்லும் உம்மையும் வருவித்துக் கூறுக.

      தெரிபொருள் - உயிர். தெரியும் இயல்புடைய பொருள்
என்றவாறு. (சித்துப் பொருள்) இளையையாகும் நிலைமையும் முதியை
ஆகும் நிலைமையும் நடுவாகுதலாகிய இந்நிலைமையும் ஆகிய இம்
முரண்பட்ட நிலைமைகளும் என்க. நின்னிலை - நின்னிடத்தே.
தொன்னிலைச் சிறப்பே என்புழி, தொன்னிலைபோன்ற சிறப்பே
எனற்பாலதாகி உவம வுருபு தொக்கது.

      (பரிமே.) என்றது யாவரும் உணரா முதுமையும் ஒருவற்குப்பின்
பிறத்தலும், அவற்கு முன் பிறத்தலும் எக்காலத்தும் எவ்விடத்தும் உள்ள
உயிர்ப்பொருட்கு உட்பொருளாதலுமாகிய இவ்விரோதத்தின் கண்ணே
உள்ளதென்றவாறு.

      26. 'தெரிபொருள்' என்னும் வினைத்தொகை தெரியும் பொருளென
நிகழ்காலத்தான் விரிக்கப்படும். உயிர்ப்பொருட்கு உணர்தற் பண்பு
இயற்கையாதலின். இந்நிலைமையும் என்னும் உம்மை விகாரத்தால்
தொக்கது.

      27. நின்னிலைத்தோன்றும் என்புழி நிலை என்பது
இடப்பொருட்டாய் நின்றது.

28 - 35. ஓங்குயர் . . . . . . . சிறந்தன்று

      (இ-ள்.) ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும் - மிக
உயர்ந்த விசும்பிடத்தே இடப்பட்ட வளைந்த இந்திர வில்லை நிகர்த்த
பல்வேறுநிற ஒளிகளையுடைய, பூண் அணி கவைஇய -
பூணப்படுவனவாகிய பிற அணிகலன்களாலே அகத்திடப்பட்ட, வார்
அணி நித்தில நித்தில மதாணி அ தகுமதி மறு - நெடிய அழகிய
முத்துமாலைகளாலே இயற்றப்பட்ட நித்தில மதாணி என்னும் அழகிய
திங்களுக்குற்ற களங்கம்போன்று, செய்யோள் சேர்ந்தநின் மாசு
இல் அகலம் - சிவந்த நிறமுடைய திருமகள் வீற்றிருத்தலேயன்றிப்
பிறிதொருகளங்கம் இல்லாத நின்னுடைய மார்பு, வளர்திரை மண்ணிய
கிளர்பொறி நாப்பண் வை வான் மருப்பின் - வளருகின்ற
அலைகளையுடைய கடலின்கண்ணே மூழ்கி எடுத்தலாலே
அவ் வலைகளாலே கழுவப்பட்டவிளக்கமுடைய புள்ளிகளை
இடையிலேஉடைய கூர்த்த வெள்ளிய தன்கொம்புகளானே
நிலமகளை, களிறு மணன்அயர்பு - ஆதிவராகம் மணஞ்செய்தலாலே,
புள்ளி நிலனும் புரைபடல் அரிது என - இந் நிலத்தின்கண்
ஒரு புள்ளி அளவிற்றாகிய நிலந்தானும் அவ் வெள்ளத்தாலே
வருந்தியதில்லை என்று