40-56 : சிலர், "தோழியே ! ஒருத்தி நாணுடைக் குலமகளாயிருந்தும் தன் கணவன் பரத்தையர்பாற் சென்றான் என்று ஊடியிருந்தவள், இப்பொழுது அவ்வூடலை மறந்து அவனோடு இவ் வெள்ளத்திடையே பிடிமேலேறினாள் ; அவள் நாணம் என்னாயிற்று" என்றார். "இங்கே ஒருவன் கூட்டத்திடையே நின்று ஒருத்தியின் கொங்கைகளைக் கூர்ந்து நோக்குகின்றான் ; அறிவிலி ! ஓட்டை மனமுடையோன்" என்றார் சிலர். "இவள் தன் நெஞ்சை ஒருவழிப்போக்கன்பின் செல்லவிட்டுத் திகைக்கின்றாள் ; அன்பு மிகுதியால் நிறையழியுமாகலின், யாம் அன்புறுவேமல்லேம்" என்பர் சிலர். "ஒருவன் ஒரு பெண் பூண்டுள்ள முத்துமாலையின் அழகை நோக்குவான்போல இம் மாலைக்கு இவள் கொங்கை மிகவும் ஏற்புடையன," என்று அவற்றைக் கூர்ந்து நோக்கினான் ; அவளும் அதற்கு நாணினாளில்லை என்றார் சிலர். இவ்வாறாகத் தாம் கேட்டவற்றைக் கூறித் தாம் விரும்பியவற்றை அவர்க்குப் பின்வருமாறு காட்டா நின்றனர் :
57-75 : "ஒருத்தி, தன் கணவனை மற்றொருத்தி நோக்குதல் கண்டு பொறாது தன் கணவனை மாலையாலே புடைத்துத் தன் முத்துவடத்தாலே அவன் முன்கையை இறுக இறுகக் கட்டினாள் ; அவன் தன் பிழை யாதும் காணாது அவளைத் தொழுது யான் செய்த பிழை யாது என்று வினவுகின்றான் ; அவனைக் காண்மின், ஒருதலைவன் தன்னொடு ஊடிய ஒருத்தியை ஊடல் தீர்க்கவும் தீராளாய் அவன் மார்பில் அரக்கு நீர் வட்டினை எறிந்தாளாக, அந் நீர் அவன் மார்பிற் குருதிபோலச் சோர, அவன் அவளடியில் வீழ்ந்து வணங்கினான் ; அது கண்ட அவள் தான் எறிந்த வட்டாலே புண்பட்டுக் குருதி சோர வீழ்ந்தான் என்று அஞ்சி அவனைத் தழுவிக் கொள்ளாநின்றாள் ; இவ்வாறு காதலர் கூடும்படி செய்வதில் இவ் வையைப்புனல் இன்றேயன்றி என்றும் வல்லதாகும் இதனைக் காண்மின்".
76-92 : மல்லிகை முதலிய எல்லாமலர்களும் மணத்தற்கிடமான தனது இருகரைகளினகத்தே அடங்கிச் சென்று மாலையில் தெளிந்து "அணைகளாலே தேங்கிநின்று வானுலகின் நிழலைத் தன்பாற் காட்டும் இயல்புடைய இவ் வையையாறு, காலைப்பொழுதிலே கலங்கிச் செங்குருதி போன்றிருந்தது காண்மின் ; ஒருத்தி தன் காதில் அசோகமலரைச் செருகிக் கொண்டு பூங்கொடி போலஅசைந்து தன் கையாலே தனது கூந்தலிற் கண்ணியை அழகுறத் திருந்தினாள் ; இவள்
|
|
|
|