உள்ளுநர் உரைப்போர் - வேதத்தின்
பொருளைக் கருத்திற் கொண்டு
கூறுவோருடைய. உரையொடு சிறந்தன்று-கூற்றோடே பொருந்திற்றில்லை.
(வி - ம்.) நின் அகலம், களிறு நிலமகளை மணந்தது
என்று
கூறுவோருடைய கூற்றோடு பொருந்தவில்லை என இயைபு காண்க. நீ
எப்பொழுதும் திருமகளை மார்பிற்கொண்டு அவளை மணந்திருத்தலானே
நிலமகளையும் மணத்தல் கூடாமையின் அக் கூற்றுப்பொருந்திற்றில்லை
என்றவாறு. இதனை,
"அரவாகிச் சுமத்தியால் அயில்எயிற்றின் ஏந்துதியால் ஒருவாயின் விழுங்குதியால்
ஓரடியால் ஒளித்தியால் திருவான நிலமகளை இஃதறிந்தாற் சீறாளோ! மருவாருந் துழாயலங்கன்
மணிமார்பின் வைகுவாள்"
(விராதன்வதை. செ - 58)
என வரும் கம்பநாடர் செய்யுட்கருத்தோடு ஒப்புநோக்குக
உள்ளுநர்: முற்றெச்சம். வேதப்பொருளை உட்கொண்டு கூறுவோர் என்க.
ஓங்குயர்: ஒருபொருட்பன்மொழி: வாங்கு - வளைந்த.
வில் - இந்திரவில். புரையும்: உவமவுருபு. பூண்அணி - பூணப்படும்
அணிகலன். நித்திலம் - முத்து. நித்திலத்தாற் செய்த நித்திலமதாணி
என்க. நித்திலமதாணியாகிய மதிக்கு மறுப்போல திருமகள் சேர்ந்த
நின் அகலம் என்க. திருமறுவன்றிப் பிறிதொரு மறுவில்லா அகலம்
என்பார். மாசிலகலம்' என்றார். அகலம் - மார்பு. களிறு - பன்றி;
ஆதிவராகம்.
மண்ணிய - கழுவிய. வை - கூர்மை. வான் - வெண்மை.
அயர்பு
என்னும் செய்பு என்னும் எச்சத்தைச் செயவெ னெச்சமாய்த் திரித்து
ஏதுப் பொருட்டாக்குக. புள்ளிநிலன் - புள்ளி அளவிற்றாகிய நிலம்.
புரை - வருத்தம். அரிது: இன்மைப்பண்பு குறித்துநின்றது. சிறந்ததன்று
எனற்பாலது தகரம் செய்யுள் விகாரத்தாற் கெட்டுச் சிறந்தன்று என
நின்றது.
(பரிமே.) 35 - ஒருத்தியொடு மணனயரும்வழிப் பிறளொருத்தி
அகலத்தைச் சேர்தல் கூடாமையிற் சிறந்ததன்றென்றார்.
36 - 40: ஒடியா.................................................வளை
(இ - ள்.) (49) போர் அடு குரிசில் நீ ஏந்திய
நனிமுரல்
வளை - போரின்கண் பகைவரைக் கொல்லுந்
தலைமைத்தன்மையுடையோனே! நீ ஏந்தியுள்ள நினது மிக்குமுழங்கும்
சங்கு, ஒடியா உள்ளமொடு உருத்து - கெடாத மனவெழுச்சியோடே
சினந்து, உடன் இயைந்து - ஒன்றுகூடி, கால் உறழ்பு எழுந்தவர் -
சூறைக்காற்றைப் போன்று நின்மேற் போர்செய்தற்கு எழுந்துவந்த
அவுணர்களுடைய, கொடி அறுபு இறுபு - |
|
|
|