யுடைய அணிகலன்களை அணிந்துகொள்வோரும், பொன் அடர் பூம்புனை திருத்துவோரும் - பொற்றகட்டாலே செய்த பூவாகிய அணிகலன்களை அணிவோரும், சாந்தம் மாற்றி அகில் புகைகெழு சாந்தம் ஆற்றப் பூசுவோரும் - சந்தனச் சாந்தினை மாற்றி அகிற் புகையினாகிய சாந்தினைத் தம்முடம்பின்கண் மிகுதியாகப் பூசிக் கொள்வோரும், கார்கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும் - முகில்போன்ற தமது கூந்தலினைக் குழலாக முடிவோரும், வேர் பிணி பல் மலர் வேயுமோரும் - அக் கூந்தலிலே வெட்டிவேரும் விலாமிச்சவேரும் ஆகிய இருவேரியோடு தொடுத்த பலமலர் மாலையைச் சூடிக்கொள்வோரும், பொருந்துவ புட்டகம் புனைகுவோரும் - நீராடற்குப் பொருந்துவனவாகிய புடைவைகளை உடுத்திக்கொள்வோரும், கட்டிய கயில்அணி காழ்கொள்வோரும் - கட்டப்பட்ட கோக்குவாயானே அழகுடைத்தாகிய வடங்களைப் பூண்போரும் ;
(வி-ம்.) மின்னவிர் ஒளியிழை - மின்னல்போன்று விளங்கும் ஒளியையுடைய அணிகலன் என்க. வேயுமோரும் - வெய்வோரும். பொன்னடர் - பொற்றகடு. பூம்புனை - பூவாகிய அணிகலன். சாந்தம் - சந்தனச் சாந்தம் : கெழுசாந்தமாற்றி அகில்புகை கெழுசாந்தம் ஆற்றப் பூசுவோரும் என மாறுக. ஆற்ற - மிகுதியாக. கார் - முகில். கதுப்பு - கூந்தல் ஒப்பனையுள் ஒன்று ; குழலாக முடிதல் என்க. மகளிர் கூந்தல் : உச்சியின் முடிதல், பக்கத்தில் முடிதல், பின்னிச் செருகல், சுருட்டி முடிதல், சடையாகப் பின்னிவிடுதல் என ஐவகையால் ஒப்பனை செய்யப்படும். இவை நிரலே, முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை எனப்படும். இதனால் கூந்தலை ஐம்பால் என்று வழங்குதலுண்டு.
கயில் - அணிகலனிற் கோக்குவாய் : இதனைக் கொக்குவாய் என்பதுமுண்டு. இக் காலத்தார் 'கொக்கி' என்பதுமது. காழ் - வடம். 'வேயுமோரும் என்பதன்கண் இடைநின்ற உம்மை இசைநிறை' என்பர் பரிமேலழகர். வேய்மோரும் என வரற்பாலது வேயுமோர் என வந்தது ஆகலின் அங்ஙனம் கூறினர்.
பொருந்துவ புட்டகம் என மாறுக. புட்டகம் - புடைவை.
(பரிமே.) 11. வேயுமோர் - அணிவோர் : உம்மை : இசைநிறை.
15. கதுப்பு - குழல்.
18. கயில் - கோக்குவாய்.
19 - 27 : வாச நறுநெய் . . . . . . . பெடையனையோர்
(இ-ள்.) கண்ணடி மாசு அற வாச நறுநெய் ஆடி வான் துகள் வயக்கி - கண்ணாடியின் அழுக்கு நீங்க நறுமண நெய்யைப் பூசி வெள்ளிய கற்பொடியிட்டுத் துலக்கி, வண்ணமும் தேசும் ஒளியும் திகழ - அக் கண்ணாடியின்கண் தமது இயற்கையழகும்
|
|
|
|