செயற்கை அழகும் கலவியாலே பெற்ற
ஒளியும் விளங்காநிற்ப அவற்றைக்
கண்டு களித்து, வாச மணத்துவர் வாய்க்கொள்வோரும் -
பஞ்சவாசத்தோடும் கூட்டி இடித்த பாக்கினை வாயின் கண் இட்டு
மெல்வோரும், இடுபுணர் வளையொடு தொடு தோள் வளையர் கட்டுவடக்
கழலினர் மட்டு மாலையர் - ஆணியிடும் இரட்டை வளையலோடே
செறிக்கப்படும் தோள்வளையினை உடையாரும் கட்டுவடத்தோடு
காலாழியை உடையாரும் தேன் துளிக்கும் மாலையினையுடையாரும் ஆகி,
வாசம் ஓசனை கமழும் மேனியர் - நாற்காவத தூரம் நறுமணங்கமழும்
திருமேனியையுடைய இம் மகளிர், மடமா மிசையோர் சிலர் மெல்லிய
நடையை உடைய குதிரையின்மீது ஏறுவோரும், அன்னப் பெரும்பெடை
அனையோர் பிடிமேல் - பெரிய பெடையன்னம்போல்வார் சிலர்
பெண்யானையின் மீது ஏறுவோருமாய்;
(வி-ம்.) வாச நறுநெய் - வாசவெண்ணெய். வான்துகள்
-
வெண்மை நிறமுடைய கற்பொடி. வயக்கி - துலக்கி. வண்ணம் -
இயற்கையழகு. தேசு - செயற்கையழகு. ஒளி - தங் காதலரோடு
புணர்ந்தமையாலுண்டான புதிய ஒளி.
வாசமணத்துவர் - பஞ்சவாசத்தோடு கூட்டி யிடித்த பாக்கு.
பஞ்சவாசமாவன: "தக்கோலம் தீம்பூந் தகைசால் இலவங்கம் கற்பூரம்
சாதியோ டைந்து" என்பன. துவர் - பாக்கு. புணர்வளை - இரட்டை
வளையல். தொடுதோள் வளை: வினைத்தொகை. கட்டு வடம் - ஒருவகை
அணிகலன். கழல் - காலாழி: கானமோதிரம். உயரிய மணம் ஒரு
யோசனை தூரம் கமழவல்லது என்பவாகலின், 'ஓசனை கமழும் மேனியர்'
என்றார்.
"கமுகின்மேல் விரிந்த பாளையும் ஓரோசனை யுலாவி
நாறுமே"
எனவும், 'ஓசனை நறும்புகை கமழ" (சீவக. 99-953) எனவும் பிறரும்
கூறுதல் காண்க.
(11) 'முன்னவி ரொளியிழை வேயுமோரும்' என்பது தொடங்கி,
'அன்னப் பெரும் பெடையனையோர்' (27) என்னுந்துணையும்
கூறப்பட்டன மகளிர் செயல்: மேலே மைந்தர் செயல் கூறுகின்றார்.
(பரிமே.) 20-21. வண்ணம் - இயற்கையழகு. தேசு -
செயற்கையழகு. ஒளி - கலவியால் வந்த நிறம்.
23. இடுவளை - ஆணியிடும் வளை.
27. பிடியை நடையால் வென்று ஏறினாரென்பது போதர
'அன்னப்பெடையனையோ' ரென்றார்.
இவ்வளவும் மகளிர; மேலன மைந்தர.
28 - 39: கடுமா . . . . . . . . சிலசில
(இ-ள்.) கடுமா கடவுவோரும் களிறுமேல் கொள்வோரும்
- இனி
மைந்தருட் சிலர் விரைந்து நடையினையுடைய |
|
|
|