பக்கம் எண் :

பரிபாடல்- வையை214

தொகைச்சொல். நிறையணி: வினைத்தொகை. மொழி மொழி:
வினைத்தொகை. மொழிகின்ற மொழி என்க. ஒன்றல - பொருந்துகில;
ஒன்றோடொன்று பொருந்துகில என்க. உடனெழுந்தன்று - ஒரே
காலத்தெழுந்தது. எழுந்தன்று - பன்மை ஒருமை மயக்கம். கேட்குநர் யார்
என்னும் வினா ஒருவரும் கேட்டனரில்லை என்பதுபட நின்றது. கில்லா
- கூடா; கேட்கக் கூடா என்றபடி.

      இனி எல்லாம் கேட்கப்படாமைக்குக் காரணங்காட்டி,
கேட்கப்பட்டசில இவை என்று கூறுகின்றார்.

40 - 44: ஒத்த . . . . . . . . அளத்தல் காண்மின்

      (இ-ள்.) ஒருவர் பிற்படார் நித்தம் அத்தகத் திகழும் அரிவையர்
- தம்முள் ஒருவர்க்கு ஒருவர் பின்னிடாதவராய்க் கூத்தாடுதற்கண்
அழகுதக தம்முள் ஒத்துவிளங்கும் ஆடல் மகளிர், ஒத்த குழலின் ஒலி
எழ முழவு மத்தரி தடாரி தண்ணுமை மகுளி இமிழ் ஒத்து அளந்து -
பொருந்திய வங்கியத்தினின்றும் இசை எழாநிற்ப முழவு மத்தரி தடாரி
தண்ணுமை மகுளி என்னும் இவ்விசைக் கருவிகளினது ஓசையையுடைய
தாளத்தை அளந்து, நேர் இறை முன்கையால் - தமது நேரிய இறையாகிய
முன்கையாலே, சீர்தூக்கி அளத்தல் காண்மின் - அத் தாளத்தை
அளத்தலைக் காண்மின்;

      (வி-ம்.) குழல் - வேய்ங்குழல். இமிழ் - ஓசை, மத்திரி முதலியன
இசைக் கருவிகள். ஒத்து - தாளம். நித்தம் - நிருத்தம்; கூத்து. அ -
அழகு. இறை - வளையலணிதற்குரிய இடமாகிய கைப்பகுதி; எனவே
இறையையுடைய முன்கை எனினுமாம்.

      இப்பகுதி மொழிகள் கேட்கப்படாமைக்குக் காரணம் கூறியபடியாம்.

      இனிக் கேட்டன கூறுகின்றார்.

45-56: நாணாள் கொல் . . . . . . . .நாரிகை யென்மரும்

      (இ-ள்.) தோழி ஒருத்தி நாணுக் குறைவு இலள் - தோழியே கேள்
ஒருத்தி நாணுக் குறையில்லாத குலமகளாயிருந்தும், சிறந்தான் நயனில்
பரத்தை இல் தோள் நலம் உண்டு துறந்தான் என - தனக்குச்
சிறந்தவனாகிய கணவன் நன்மையில்லாத பரத்தையரது இல்லத்திற்குச்
சென்று அவரது தோளினது அழகை நுகரும் பொருட்டுத் தன்னை
நீத்துப் போயினன் என்று அவனோடு ஊடியிருந்தவள், யாணர் மலி
புனல் நீத்தத்து - புதுவருவாயினையுடைய மிக்க நீராகிய
வெள்ளத்தின்கண், இரும்பிடி சிறந்தானோடு சேண் ஏறினாள் - பெரிய
பிடியானையின் முதுகின்மேல் நீராட்டு விருப்பத்தாலே அவ்வூடலையும்
மறந்து தன் கணவனோடு உயர ஏறினாள், மற்று