பக்கம் எண் :

பரிபாடல்- வையை217

சூளாள் என்பதுபற்றியும் யான் அறியேன் என்க. ஒல்லுவ - அவனாற்
பொறுக்கத்தகுவன.

      தூயவனாகலின் பொறாதவனாய், மீண்டும் சூளின்கண் மிக்கு
என்பார் 'உரைத்தும்' என்றார். உறைத்தல்: அதன்கண் ஊன்றிநிற்றல்.
செறுத்து செய்யாதன சொல்லுதலிற் சினந்து என்க.

      (பரிமே.) 61. தூயவனை - பிழையில்லாதானை.

      62. என - என்று அவள் சொல்ல.

      65. ஒல்லுவ - பொறுப்பன.

      66. உறைத்தும் - அச் சூளின்கண் மிக்கும்.

67-76: புல்லாது . . . . . . . . .எனவாங்கு

      (இ-ள்.) புல்லாது ஊடிப் புலந்து நின்றவள் - இவ்வாறு ஊடல்
தீர்த்துழியும் கூடாமல் ஊடிநின்றவள் அந்நிலைமைகளினின்றும் புலவி
நிலைமைக்கண் நின்று, பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய -
பூவினது மணத்தையும் அழகையுமுடைய அரக்கு நீரால் நிறைக்கப்பட்ட
வட்டினை அவன் மார்பில் எறிய, எழில் உண்கண் நோக்கம் எறிவேல்
பட்ட புண் பாய் குருதிசோர - அவ்வரக்குநீர் அவளுடைய அழகிய
மையுண்ட கண்ணாகிய எறிகின்ற வேல்பட்ட புண்ணினின்றும் குருதி
சொரிவது போன்று சொரியாநிற்ப, பகையின்று உளம்சோர நில்லாது
அல்லாந்து நீங்கி நிலம் சோர - அவன் அந்நிலைமையினைப்
பொறானாய் அவள் பாற பகைமை இலனாகித் தன் நெஞ்சம்
நெகிழ்தலானே அவள் முன்னிலை நில்லாது அலமந்து
அவ்விடத்தினின்று நீங்கி நிலத்தின்கண் வீழ்ந்து வணங்க, மல்லார்
அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து - வணங்குதற்பொருட்டு அங்ஙனம்
நிலத்தில் வீழ்ந்தவனைக் கண்ட அவள் அவனது மற்போர்க்குப்
பொருந்திய மார்பின்கண் தான் எறிந்த வட்டாலே உண்டான புண்ணாலே
இங்ஙனம் நிலத்தில் வீழ்ந்தானெனக் கருதி அஞ்சி மயங்கி, எல்லாத்
துனியும் இறப்ப - முன்புள்ள எல்லாப் புலவியும் நீங்காநிற்ப; நல் ஏர்
எழில் ஆகம் சேர்வித்தல் - தன்காதலனாகிய அவனுடைய நல்ல
அழகினையுடைய மார்பினைத் தழுவிக்கொண்டாள்; இங்ஙனம்
புலந்தாரைப் புலவி தீர்த்துக் கூடச் செய்தலின்கண், வையைப் புனல்
எஞ்ஞான்றும் வல்லது என - இவ் வையைநீர் இன்றேயன்றி எக்காலத்தும்
வன்மையுடையது ஆகும் இந்நிகழ்ச்சியினையும் காண்மின் என்று காட்டா
நிற்ப;

      (வி-ம்.) ஊடல் முதிர்ந்த நிலைமைக்கண் துனி எனப்படும். ஊடிப்
பின்னர்ப் புலந்து நின்றவள் என்க. வண்ணநீர் - அரக்காலே நிறமூட்டப்
பட்ட நீர் என்க. ஊடல் முதிர்ந்து புலவிநிலை எய்தி நின்றாளாகலின்,