கொடிகள் அற்று முறிந்து (வீழவும்),
செவி செவிடுபடுபு -
அவ்வவுணர்களின் செவிகள் செவிடுபட்டுப் (போகவும்), முடிகள்
அதிர - அவர் முடிகள் அதிரவும், படிநிலை தளர - நிலத்தின்கண்
நிற்கும் நிலை தளர்ந்து நடுங்கவும், (37) இடி எதிர் கழறும் - இடிபோல
முழங்காநிற்கும்;
(வீ-ம்.) கால் - காற்று. உறழ்பு - ஒத்து. எழுந்த
அவுணர் என்க.
எழுந்தவர் கொடி அற்று இற்றுச் செவி செவிடுபட்டு முடிகள் அதிரும்
படியும் நிலைதளரவும் முழங்கும் என இயைக்க. படிநிலை - படியின்கண்
நிற்கும் நிலை என்க. படி - நிலம். நனிமுரல்வளை: இயற்கையடைகள்.
மிக்குமுழங்கும் இயல்புடைய வளை, இடிபோல முழங்கும் என்க.
வளை - பாஞ்சசன்யம். இடி எதிர் கழறும் என்புழி, எதிர் என்பது
உவமவுருபுப் பொருளது. கழறும் - முழங்கும்.
(பரிமே.) 37. 'எதிர் கழறும்' என்பது உவமப்பொருட்டு.
'முரறல்'
உயிருள்வழி அடையாய் வந்தது.
40 - 49: முடி . . . . . . . . . . படையே
(இ - ள்.) (49) போரடு குரிசில் நீ ஏந்திய படை
- போரின் கண்
பகைவரைக் கொல்லுந் தலைமையுடையோனே! நீ ஏந்திய
ஆழிப்படையோ (48), சேரார் - நின் பகைவராகிய அவுணர்களுடைய,
முடி அழிபு இழிபு தாரொடு புரள - தலைகள் வலியழிந்து சாய்ந்து தரித்த
மாலையொடு புரளும்படியும், நிலை தொலைபு - தாம் நின்ற நிலைகெட்டு;
வேர்தூர் மடல் குருகு பறியா நீள் இரும் பனைமிசை - வேரும் தூரும்
மடலும் குருத்தும் பறிக்கப்படாத நீண்ட கரிய பனைகளின் உச்சியில்
உள்ள, பல பதினாயிரம் குலை - பற்பல பதினாயிரம் குலைகள்,
தலைஇறுபு - அப் பனைகளின் தலைகளினின்றும் இற்று, தரை
உதிர்வபோல் - நிலத்தின்கண் உதிர்வனபோல, நில்லாது ஒருமுறை
கொய்பு கூடி-ஒன்றும் தத்தம் உடன்மேல் நில்லாமல் ஒருமுறையிலேயே
கொய்தல் பெற்று, ஒருங்கு உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபு
அளறு சொரிபு நிலம் சோர-உடனே ஒருசேர உருண்டு பிளந்து நெரிந்து
பின்னரும் தனித்தனியே உருண்டு சிதறிக் குருதிச் சேற்றைச் சொரிந்து
நிலத்தின்கண் சோர்ந்துகிடக்கும்படியும், இன் உயிர் செகுக்கும்
- அப் பகைவருடைய இனிய உயிரை அழித்தொழிக்கும்;
(வி - ம்.) நீ ஏந்திய படை நின் சேரார் தலை
தாரொடு புரளும்
படியாகவும் பனங்குலைகள் உதிர்வனபோல் உதிர்ந்து நிலத்தின்கண்
சோர்ந்து கிடக்கும்படியும் செய்து அப் பகைவர் உயிரைச் செகுக்கும் என
இயைபு காண்க.
குருகு - குருத்து. பறியா - பறிக்கப்படாத என்க. அழிபு
இழிபு
இறுபு கொய்பு உருள்பு சிதறுபு சொரிபு என்பன செய்பு என்னும்
வினையெச்சங்கள். சேரார் - பகைவர். |
|
|
|