பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்223

      58-64: சிவந்த கண்ணினையும் ஆழிப் படையினையும் உடைய
செல்வனே! துழாய் மாலையணிந்த திருமார்பினை உடையோனே! நீ அத்
தன்மையுடையை என நினைந்து நினைந்து முற்பிறப்புக்களிலே யாம்
செய்த தவப்பயனால் இப்பிறப்பின்கண் நின் திருவடியைத்
தொழுதிறைஞ்சி வாழ்த்தும் பேறுபெற்றேம்; யாம் மேலும் மேலும்
ஆசைப்படுகின்ற பொருளும் இவ்வாறு நினது திருவடியைத்
தொழுதிறைஞ்சி வாழ்த்துவதேயாம்.

   மணிவரை யூர்ந்த மங்குன் ஞாயிற்
   றணிவனப் பமைந்த பூந்துகில் புனைமுடி
   இறுவரை யிழிதரும் பொன்மணி யருவியின்
   நிறனொடு மாறுந்தார்ப் புள்ளுப்பொறி புனைகொடி
 5 விண்ணளி கொண்ட வியன்மதி யணிகொளத்
   தண்ணளி கொண்ட அணங்குடை நேமிமால்
   பருவம் வாய்த்தலி னிருவிசும் பணிந்த
   இருவேறு மண்டிலத் திலக்கம் போல
   நேமியும் வளையு மேந்திய கையாற்
10 கருவி மின்னவி ரிலங்கும் பொலம்பூண்
   அருவி யுருவி னாரமொ டணிந்தநின்
   திருவரை யகலம் தொழுவோர்க்
   குரிதமர் துறக்கமு முரிமைநன் குடைத்து
   சுவைமை இசைமை தோற்ற நாற்றமூ
15 றவையு நீயே யடுபோ ரண்ணால்
   அவை அவை கொள்ளுங் கருவியு நீயே
   முந்தியாங் கூறிய ஐந்த னுள்ளும்
   ஒன்றனிற் போற்றிய விசும்பு நீயே
   இரண்டி னுணரும் வளியு நீயே
20 மூன்றி னுணரும் தீயு நீயே
   நான்கி னுணரு நீரு நீயே
   ஐந்துடன் முற்றிய நிலனு நீயே
   அதனால், நின்மருங் கின்று மூவே ழுலகமும்
   மூலமும் அறனு முதன்மையி னிகந்த
25 காலமும் விசும்புங் காற்றொடு கனலும்
   தன்னுரு வுறழும் பாற்கட னாப்பண்
   மின்னவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த