நின் வளை இடிபோல முழங்கும்; நின் படை உயிர் செகுக்கும்
என இயைத்துக் கொள்க.
(பரிமே.) 43. பறியாப்பனை எனச் சினைவினை முதன்
மேனின்றது.
50 - 51: ஒன்னார்............................................நிறனே
(இ - ள்.) ஒன்னார் உடங்குண்ணும் அதன் உடல் -
பகைவரை
ஒருசேர அழிக்கும் அந்த ஆழிப்படையின் உடல், கூற்றம் -
கூற்றுவனையே ஒக்கும், அதன் நிறன் - அப் படைக்கலத்தின் நிறம்,
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு - தன்னகத்தே இட்டுச் சுடுகின்ற
பொன்னோடே எழுந்து விளங்காநின்ற நெருப்பினது கொழுந்தின்
நிறத்தை ஒக்கும்;
(வி - ம்.) அதன் என்பதனை உடல் என்பதனோடும்
கூட்டுக.
இரண்டிடத்தும் உவமவுருபு செய்யுள் விகாரத்தாற் றொக்கது. பொன்
சுடுங்கால் அப் பொற்குழம்போடு கூடி எழும். தீக்கொழுந்து சிறிது
பசுமை கலந்த நிறமுடையதாய்த் திகழ்தல் கண்டறிக. நுடங்கி எரிதலின்
தீக்கொழுந்தினை நுடக்கு என்றார்.
பொன் - தன்னகத்திடப்பட்டுச் சுடப்படும் பொன் என்க. ஏர்பு - எழுந்து.
52 - 57: நின்னது..................................................பொருளே
(இ - ள்.) நின்னது, திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி
-
உன்னுடைய விளங்குகின்ற ஒளி சிறப்பினையுடைய இருண்ட நீல
மணியின் ஒளியை ஒக்கும், கண்புகழ்சால் தாமரை அலர் இணை
பிணையல் - நின்னுடைய கண்கள் யாவரானும் புகழ்தல் அமைந்த
தாமரைப் பூக்கள் இரண்டைப் பிணைத்து வைத்ததனை ஒக்கும், வாய்மை
வயங்கிய வைகல் - நின்னுடைய வாய்மைப்பண்பு தப்பாமல் வருகின்ற
விளக்கமுடைய நாளினை ஒக்கும், சிறந்த நோன்மை நாடின இருநிலம்
- நினது சிறந்த பொறுமையை ஆராயின் பெரிய நிலத்தையே ஒக்கும்,
நினது சாயல் யாவர்க்கும் நிறை வான் - நின்னுடைய அருள் சிலரை
வரைந்து பெய்யாது எல்லோர்க்கும் கைம்மாறு கருதாமற் பொதுவிற்
பெய்யும் நீரான் நிறைந்த முகிலை ஒக்கும், என்னும் நாவல் அந்தணர்
அருமறைப்பொருள் - என்று கூறாநிற்கும் நாவன்மையுடைய
அந்தணர்க்குரிய வேதத்தினது பொருள்;
(வி - ம்.) இருள் திருமணி - இருண்ட அழகிய நீலமணி.
வைகல்
- ஞாயிறு எனினுமாம். தப்பாது வருதலானே ஞாயிற்றை ஒக்கும் என்றும்,
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல இகழ்வாரையும் பொறுத்தலானே
நினது பொறை நிலத்தை ஒக்கும் என்றும், கைம்மாறு கருதாமல்
யாவர்க்கும் பொதுவாகப் பெய்தலானே நினது |
|
|
|