30-33: மறமிகு . . . . . . . நாஞ்சிலோனும்
(இ-ள்.) மறம் மிகு ஒலிமலி மாறு அடு தானையால் -
தறுகண்மைமிக்கதும் முழக்கமிக்கதும் பகைவரைக் கொல்லுமியல்பு
டையதுமாகிய படைகளுடனே, திறன் இகந்து வரூஉம் அவர் உயிர்
அகற்றும் - ஒழுக்கமுடைமையைக் கடந்து போரை மேற்கொண்டு
தன்மேல் வாராநின்ற பகைவர் உயிரைப்போக்கும், விறல் மிகு வலி -
வெற்றிமிக்க ஆற்றலும், ஒலி பொலிவு அகழ் புழுதியின் -
ஆரவாரத்தாலே பொலிந்து தன்னால் அகழப்படும் புழுதியை
உழுமாறுபோல, நிறன் உழு வளைவாய் நாஞ்சிலோனும் - அப்
பகைவருடைய மார்பினை உழாநின்ற வளைந்த வாயினையுடைய
கலப்பைப்படையை உடைய பலதேவனும்;
(வி-ம்.) மறம் - தறுகண். மாறு - பகை; தானையால்
என்புழி
ஆலுருபு ஒடு உருபின்பொருட்டு. இனி, தானை உடைமையானே என
ஏதுப்பொருட்டாக்கினுமாம். திறம் - ஒழுக்கமுடைமை: நல்லொழுக்கத்தின்
இழுக்காது நிற்றற்கு மனத்திட்பமே காரணமாகலின் ஈண்டு ஒற்றுமைபற்றிக்
காரியத்தைக் காரணமாகக் கூறினர் என்க. இறைவனுக்குப் பகைவர்
என்போர் நல்லொழுக்கத்தினின்று விலகித் தீயொழுக்கின்கண்
செல்வோரே என்பதும் இறைவன் அவரை ஒறுத்தல் அவர் தீவினைக்கண்
மிக்கபோதே என்பதும் உணர்த்தற்கு. 'திறனிகந்து வரூஉம் அவர்
உயிரகற்றும்' என்றார். அகழ்புழுதி: வினைத்தொகை. பொருளின்கட்
கூறிய உழுதலை உவமையினுங் கூட்டிப் புழுதியை உழுமாறுபோல என்க.
புழுதியை உழுதலும் அதன் றொழிலேயாகலின் அதனை
உவமையாக்கினார். நாஞ்சில் - கலப்பை. நாஞ்சிலோன் - பலதேவன்.
34-37: நானிலம் . . . . .. . . . ஒருவனை
(இ-ள்.) நானிலந் துளக்கு அற - நான்கு கூறுபட்ட இம்
மண்ணுலகத்து வாழும் உயிர்களின் நடுக்கந்தீரும் பொருட்டு அதனை
நீரினின்று மேலே எடுத்தற்கு, முழு முதல் நாற்றிய பொலம்புனை இதழ்
அணி மணி மடல் பேரணி - பரிய அடிப்பகுதி வரை பொருந்தக் கவித்த
பொன்னாலாகிய மலரானே அழகிய மணிகளையுடைய மடலையுடைய
பெரிய கிம்புரியையுடைய, இலங்கு ஒளி மருப்பின் களிறுமாகி -
விளங்காநின்ற ஒளியினையுடைய கொம்புகளையுடைய ஆண் பன்றியும்
ஆகத் திருவுருக்கொண்டும், மூவுருவாகிய தலைபிரி ஒருவனை -
சாத்துவிக இராசத தாமதங்களாகிய முக்குண வேறுபாட்டாலே பிரமனும்
உருத்திரனும் திருமாலும் ஆகிய மூன்று முதற் கடவுளராகப்
பிரிந்தவனுமாகிய ஒரே முழுமுதற் கடவுளாகிய பெருமான் நீ;
(வி-ம்.) நானிலம் - குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
என்னும்
நான்கு கூறுபாடுடைய நிலவுலகம் என்க. ஊழிக்காலத்தே இந் நில |
|
|
|