பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்24

அருள் வானையும் ஒக்கும் என்றும் பொதுத்தன்மை விரித்து உவமவுருபும்
யாண்டும் வருவித்துக் கூறுக. நோன்மை - பொறுமை. சாயல் - மென்மை;
ஈண்டு அருள் என்னும் பொருட்டாய் நின்றது. நிறைவான் என மாறுக.
வான 'முகிலுக்கு' ஆகுபெயர். நீரான் நிறைந்த முகில் என்க.

      "அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப்
பயந்தே விடும்" நிறைமொழி கூறும் நாவுடை அந்தணர் என்பார். 'நாவல்
அந்தணர்' என்றார். வேதம் உணர்தற்கரிய பொருள் உடைத்தாகலின்.
அருமறை எனப்பட்டது. மறையின்கண் உள்ள பொருள் அம்
மறையோதுவார்க்கு உணர்த்துமாகலின் அதன் தொழிலாக்கி
அருமறைப்பொருள் கூறும் எனப்பட்டது.

      (பரிமே.) 50-5. ஒக்கும் என்னும் உவமச்சொல் வருவித்துரைக்கப் பட்டது.

58 - 68: அவ்வும்.................................................வரவு

      (இ - ள்.) (60) செவ்வாய் உவணத்து உயர்கொடியோயே - சிவந்த
அலகினையுடைய கருடன் எழுதப்பட்ட உயர்ந்த கொடியை உடைய
பெருமானே, அவ்வும் பிறவும் ஒத்தனை - யாங்கள் எடுத்துக்கூறிய மணி
முதலிய அப்பொருள்களையும் எம்மாற் கூறப்படாத ஏனைப்
பொருள்களையும் பண்புகளானும் தொழில்களானும் நீ ஒத்திருக்கின்றாய்,
உவ்வும் - இப் பொருள்களிடத்தும், எவ்வயினோயும் நீயே - ஏனைப்
பொருள்களிடத்தும் உட்பொருளாய் உறைபவனும் நீயே ஆகின்றாய்,
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் - வேதத்திலே கூறப்பட்ட வேள்வி
முதல்வனது சொல்லும், படிமுறை வேள்வியுள் - படிப்படியாக
ஒன்றற்கொன்று உயர்ந்த வேள்வியினிடத்தே வேள்வித்தூணாகி நின்று
அதன்கட் பிணிக்கப்படும், ஆடுபற்றிக் கொளலும் - யாகப் பசுவினைப்
பற்றிக் கொள்ளுதலும், புகழ் இயைந்து இசை மறைமுறை உறுகனல் மூட்டி
- அநாதியாய் உள்ளது என்னும் புகழோடே பொருந்த ஓதப்படுகின்ற
வேதத்தின்கட் கூறப்பட்ட முறைப்படியே அவ்வியாக குண்டத்தின்கண்
மிக்க தீயை மூளச்செய்து, திகழொளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும் -
அத் தீயின்கண் நெய் முதலியன சொரிந்து விளங்கும் ஒளியினையுடைய
அவ்வொள்ளிய சுடரினது பெருக்கத்தைச் செய்து கொள்ளுதலுமாகிய
இம்மூன்றும், நின் உருபுடன் உண்டி - நிரலே நினது உருவமும் உணவும்,
பிறர் உடம்படு வாரா - கடவுள் இல்லை என்பாரும் உடன்படும்படி,
நின்னொடு புரைய - நினது பெருமைக்குப் பொருந்தும்படி; அந்தணர்
காணும் வரவு - அந்தணர் காண்கின்ற நினது வெளிப்பாடும் ஆகும்;

      (வி - ம்.) அவ்வும் - அப்பொருளும். உவ்வும் - உவையும்.
அங்கிங்கெனாதபடி யாண்டும் எப்பொருளிடத்தும் உறைபவனும் நீயே