தாயர், சிறுவர் அழுங்கால் புலிபுலி என்று அச்சுறுத்தும்
வழக்கமுண்மையை, "உள்ளில் வறுங்கலந் திறந்தழக் கண்டு,
மறப்புலியுரைத்தும்" (புறநா - 160) எனவரும் புறப்பாட்டானும் உணர்க.
ஆண் பெண் இருபால் மகாரையும் தாயர் 'புலிபுலி' என்று
அச்சுறுத்துவர் எனினும், இது கூறுவாள் தோழியாகலின் தன்னின்
மகளிரையே கூறினள் என்க.
உழுவை - புலி. நீர் அயல் - சுனை முதலியவற்றின்
அருகே
என்க. கலித்தல் - தழைத்தல்: இதற்கு நீரயல் நிற்றல் குறிப்பேது என்க.
நெரி - நெரிப்பு. முகை - மொட்டு. வார்குலை - நெடிய பூங்கொத்து;
இதழ்நிரை என மாறுக. தோன்றி ஒருவகைக் கொடி. காந்தள் -
வெண்காந்தள். இதன் மலர் வெண்ணிறமுடையன, தோன்றி மலர்
செந்நிறமுடையன ஆகலின், அவ் வெண்ணிற மலர்மேல்
இச் செந்நிறமலர் பரந்த காட்சி யினிதாதல்பற்றி விதந்து கூறினள் என்க.
இத்துணையும் தோழி திருப்பரங்குன்றத்தைப் புகழ்ந்து
மேலே
அக் குன்றத்துறையும் முருகவேளை முன்னிலைப்படுத்திப் பரவுகின்றாள்.
(பரிமே.) 13. இவற்றோடென்பது வருவிக்கப்பட்டது.
16. தாவ என்பது தாஅயெனத் திரிந்தது.
17-24: போர்மலிந்து . . . . . . . . .பாட்டமர்ந்தோயே
(இ-ள்.) போர் மலிந்து சூர் மருங்கு அறுத்த சுடர்ப்
படையோயே
- போரின்கண் மிக்குச் சென்று சூரபன்மாவாகிய மாமரத்தினைக்
கிளையோடு அறுத்தருளிய ஒளியுடைய வேற்படையை ஏந்திய
பெருமானே! , கறைஇல், கார் மழை பொங்கி அன்ன நறையின்
நறும்புகை நனி அமர்ந்தோயே - களங்கம் இல்லாத கார்காலத்து
வெண்மேகம் கிளர்ந்தெழுந்தாற் போன்ற நறிய அகில் முதலியவற்றானே
புகைக்கப்பட்ட நறுமணப்புகையை மிக விரும்பியவனே, அறுமுகத்து
ஆறுஇரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப்பூ நயந்தோயே - ஆறு
முகமும் பன்னிரண்டு கைகளும் உடையையாய்ச் சென்று அழகானே
பிறமகளிரை வென்ற வெற்றியினையுடைய வள்ளியை நயந்தோனே,
கேளிர் கெழீஇச் சுற்ற எழீஇ நின்னைப் பாடும் பாட்டு அமர்ந்தோயே
- தலைவியர் தம்மைப் பிரிந்துசென்ற தங் கணவர் விரைந்துவந்து
புணர்ந்து பின்னர் நீங்காமைப் பொருட்டு யாழிசை எழுப்பி நின்னைப்
பரவிப் பாடாநின்ற பாட்டினை விரும்புவோனே!
(வி-ம்.) போர் மலிந்து - போர்த்தொழிலிலே
மிக்குச் சென்று;
அஃதாவது: "பாயிரும் பனிக்கடல் பார்துகள்படச் சேய்உயர் பிணிமுகம்
ஊர்ந்துபுக்கு அமருழக்கி" என்றவாறு. சூர் - சூரபதுமன் என்னும்
அசுரன். அவன் கடலின் நடுவே மாமரமாக நின்றான் என்ப. அதற்கேற்ப
'மருங்கறுத்த' என்றார். மருங்கு - கிளை; சுற்றமுமாம். சுடர்ப்படை
என்றது வேற்படையை. |
|
|
|