கறை - களங்கம், குற்றம்; ஈண்டுக் கறுப்புநிறத்தைக் குறித்து
நின்றது. சிறிதும் கறுப்புநிறம் விரவாது முழுதும் வெண்மைநிறமுடைய
மேகம் என்றவாறு. இது நறுமணப்புகைக்கு உவமை என்க. "அகிலெழு
நறும்புகை மஞ்சி னாடவும்" (சூளா. நகர - 6) என்றார் பிறரும்.
நறை - அகில் முதலிய நறுமணப் பொருள்கள். அமர்தல்
-
விரும்புதல். நறுமலர் வள்ளிப்பூ என்றது. வள்ளிக்கொடிக்குள்ள
அடைமொழி அப் பெயருடைய வள்ளிக்காயிற்று. வள்ளியாகிய
பூவினை நயந்தோயே என்க. வள்ளிப்பூ: ஆகுபெயர்: தோளால் என்புழி
ஆல் உருபு ஒடு உருபின் பொருட்டு. தோளுடனே சென்று என்க.
கேளிர் - கணவர். கெழீஇ - புணர்ந்து. சுற்ற என்றது பின் நீங்காது
எம்மைச் சூழ்ந்தே இருக்கும்படி என்றவாறு. மகளிர் தங்கணவர் தம்மைப்
பிரியாதிருப்பச் செவ்வேளை வேண்டிப் பாடுகின்ற வழக்கத்தை,
"கயிலைநன் மலையிறை மகனைநின் மதிநுதல்
மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயன்மண மொழியரு ளவர்மணம் எனவே.
"மலைமகள் மகனைநின் மதிநுதல் மடவரல்
குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்நின் னிணையடி தொழுதேம்
பலரறி மணமவர் படுகுவர் எனவே."
"குறமகள் அவளெம் குலமகள் அவளொடும்
அறுமுக வொருவநின் அடியிணை தொழுதேம்
துறைமிசை நினதிரு திருவடி தொடுநர்
பெறுகநன் மணம்விடு பிழைமணம் எனவே"
(குன்றக்குரவை, பாட்டுமடை: 15-16-17)
எனவரும் சிலப்பதிகாரத்தான் உணர்க.
பாட்டமர்ந்தோயே என்பதற்குப் பாட்டின்கண் இருப்பவனே
எனினுமாம் என்னை ? பாட்டின்கண் சுவையாக உணரப்படுவது இறைப்
பொருளே ஆகலின். 'ஏழிசையும் இசைப்பயனும் ஆனான் கண்டாய்'
எனப் பெரியாரும் பணித்தனர்.
(பரிமே.) 18. சூரைக் கிளையொடறுத்த.
22. நறுமலர் வள்ளி என்பது தன் பொருட்கேற்ற அடையடுத்து
நின்ற ஆகுபெயர். 24. எழீஇ - யாழை யெழுவி.
25 - 28: பிறந்த . . . . . . . . . அறனமர்ந்தோயே
(இ-ள்.) பிறந்த ஞான்றே - பெருமானே "நிவந்தோங்கு
இமயத்து
நீலப்பைஞ்சுனைப் பதுமத்துப் பாயலில்" நீ கார்த்திகை
ப.--16 |
|
|
|