பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்243

29-32: அன்னை . . . . . . . . . . . பலவே


      (இ-ள்.) அன்னை ஆகலின் - நீ அத் தன்மையுடையையாதலால்,
யாம் நின்னை அமர்ந்து துன்னித் துன்னி வழிபடுவதன் பயம் -
அடியேங்கள் நின்னைப் பெரிதும் விரும்பி நின்னை அடுத்தடுத்து
வழிபடாநின்றேம் அங்ஙனம் வழிபடுவது எப் பயனைக் கருதியோ
என்பையாயின், அவை - அவ் வழிபாடுகள் தாமே, இன்னும் இன்னும் -
மேலும் மேலும், நின் தொல் முதிர் மரபின் புகழினும் பல ஆகுக -
நின்னுடைய மிகவும் பழைதாகிய மரபினையுடைய புகழ்களையுங் காட்டில்
சாலப்பல ஆகுக என்பது கருதியேயாம் அருள்வாயாக;

      (வி-ம்.) அன்னை - அத் தன்மையுடையை. அமர்ந்து
- விரும்பி.
துன்னி - அடுத்து. வழிபடாநின்றேம். அங்ஙனம் வழிபடுவதன்பயம்
பலவாகுதலே என்றவாறு. அவை - அவ்வழிபாடுகள். தொன்முதிர் -
மிகவும் பழைய.

      (பரிமே.) வாரும் என்பவர் சொற்போன்றன (9) என்றதனாலும்
எழீஇப் பாடும் பாட்டமர்ந்தோயே (24) என்றதனாலும் இப்பருவத்தே
தலைமகன் வருமென்பது பட்டவாறு கண்டுகொள்க.