பதினைந்தாம் பாடல்
-----------
திருமால்
பொருட் சுருக்கம்
1-14: அறிவெல்லையால் அறியப்படாத புகழுடனே பொலிந்து
நிலத்தைத் தாங்கும் சக்கரவாள முதலாகத் தொல்லிசைப் புலவர்கள்
ஆராய்ந்துரைத்த மலைகள் பற்பல உள்ளன; அப் பலவற்றுள்ளும் பசி
வெம்மையாற்றி நிறைந்த பயன் பலவும் தரும் மலைகள் சிலவேயாம்!
அவற்றுள்ளும் தெய்வங்கள் விரும்பும் மலைகள் ஒருசிலவே உள்ளன;
அவற்றுள்ளும் மாயோனையும் பலதேவனையும் தாங்கும்
திருமாலிருங்குன்றம் சிறந்ததாகும்.
15-18: திருமால் அருள்புரிந்தாலன்றி வீறுபெறு துறக்கம்
ஏறுதல்
எளிதன்று; அரிதாகப் பெறத் தகுந்த துறக்கத்தை எளிதாகப்
பெறச்செய்யும் அத் திருமாலிருஞ்சோலை மலையை யாம் ஏத்தக்கடவேம்.
19-29: அம் மலையினின்றும் பலதேவனுடைய திருமார்பில்
அணியப்பட்ட வெண்கடப்பமாலை போன்ற அருவி வீழ்வதனாலே
சிலம்பாறு அழகுபெறும்; திருமாலிருஞ்சோலை என்னும் பெயர்
உலகெலாம் பரவும்படி மகளிரும் மைந்தரும் காமம் விதைத்து
விளைக்கும் யாமத்தின் இயல்பைத் தன்பாலுடைய இவ்விருங்குன்றத்திலே
பொன்னாடை புனைந்த திருமால் பல தேவனோடு அமர்ந்து நின்றருளும்
திருக்கோலத்தை மாந்தர்களே எல்லீரும் நினைமின்! அக் குன்றத்தின்
சிறப்பைக் கேண்மின்!
30-34: சுனைகளெல்லாம் நீலமலர் மலர்தலானும், அச்
சுனையைச்
சூழ அசோகும் வேங்கையும் மலர்தலானும் அம் மலை மாயோனை ஒத்து
விளங்காநிற்கும்; அம் மலை கண்டோர் மயக்கறுக்கும் ஒரு தெய்வமே
ஆகுங் கண்டீர்; ஆண்டுச் சென்று திருமாலைத் தொழமாட்டாதீர் அம்
மலையையேனும் கண்டு தொழுமீன்!
35-45: அம் மலையின்கண் மகவாலே தழுவப்பட்ட மந்தி
ஒரு
சிகரத்தினின்று ஒரு சிகரத்தே பாயவும், மயில்கள் |
|
|
|