"ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்கமிடத் தான்தன் வேங்கடத்துக்
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே,"
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"உம்பருல காண்டு ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே"
(4-ஆம் திருமொழி: 1-10)
எனவரும் குலசேகர ஆழ்வார் பத்திச்சுவை பழுநிய திருமொழியானும்
உணர்க.
(பரிமே.) 63. தனக்கு நன்மையை விரும்பி அஞ்சப்படுதலையுடைய
வேதம்.
64. அறிந்தவற்றைக் கூட்டி உரைத்தேமாய்.
|
|
|
|