32-47: மேலும் ஒருதலைவன் கள்ளாலும் நீராட்டாலும்
புலவியாலும் சிறந்த பரத்தையர் கண், மேலும் சிவக்கும்படி நீராடுங்கால்
அப் பரத்தையரை அடுத்தடுத்துத் தழுவினான்; அவன் மார்பின்கண்
குங்குமக்குழம்பு அழிந்ததும் அழியாததுமாகக் காணப்பட்டமையானே
அவன் தோற்றம் மூங்கிலாலே தாக்குண்டு தேன்ஒழுகும் மலையின்
தோற்றத்தை ஒத்தது; இங்ஙனம் தோன்றச் செய்வதும் இவ்வையையின்
இயல்பேயாம்.
48-49: மலையின்மேல் முகில் முழங்கிய அளவானே,
இவ் வையையின்கண் நீர் பெருக அலைகள் கரையை மோதி ஆரவாரிக்கும்.
50-55: வையையே! மைந்தரும் மகளிரும், பொருள்களைத்
தானம்பண்ணி அதன் பயனாகிய போகத்தை நுகர வேண்டி நாடோறும்
ஆடுதலால், அவர் கையுறையாகிய பொன்மீன் முதலியவும், அவர்
அணிந்த சாந்தும் மாலையும், ஈர ஆடையைப் புலர்த்தும் புகையும்,
நினக்குத் தரும் உண்டியும் இடையறாமல் மழை மறாதொழிக;
அம் மழையினாலே வெள்ளம் பெருகி நினக்கு என்றும் வற்றாதொழிக.
கரையே, கைவண் தோன்றல் ஈகை போன்மென
மைபடு சிலம்பிற் கறியொடுஞ் சாந்தொடும்
நெய்குடை தயிரி னுரையொடும் பிறவொடும்
எவ்வயி னானு மீதுமீ தழியும்
5 துறையே, முத்துநேர்பு புணர்காழ் மத்தக நித்திலம்
பொலம்புனை யவிரிழை கலங்கலம் புனன்மணி
வலஞ்சுழி யுந்திய திணைபிரி புதல்வர்
கயந்தலை முச்சிய முஞ்சமொடு தழீஇத்
தத்தந் துணையோ டொருங்குட னாடும்
10 தத்தரிக் கண்ணார் தலைத்தலை வருமே
செறுவே, விடுமலர் சுமந்து பூநீர் நிறைதலிற்
படுகண் இமிழ்கொளை பயின்றனர் ஆடும்
களிநாள் அரங்கின் அணிநலம் புரையும்
காவே, சுரும்பிமிர் தாதொடு தலைத்தலை மிகூஉ
15 நரந்த நறுமலர் நன்களிக் கும்மே
கரைபொழுகு தீம்புனற் கெதிர்விருந் தயர்வபோற்
கானலங் காவும் கயமுந் துருத்தியுந்தேன்
தேனுண்டு பாடத் திசைதிசைப் பூநலம்
|
|
|
|