நிறைதலாலே, படுகண் இமிழ்கொளை
பயின்றனர் ஆடும் - இசை
தோன்றுதற் கிடமான முழவு முதலிய இசைக்கருவிகளின் கண்ணிடத்தே
எழாநின்ற ஒலியையும் பாட்டினையும் பயின்ற ஆடன்மகளிர்
கூத்தாடுகின்ற, களிநாள் அரங்கின் அணிநலம் புரையும் - மகிழ்தற்குரிய
நாளிலே இயற்றிய கூத்தாட்டரங்கினது ஒப்பனை செய்யப்பட்ட அழகினை
ஒக்கும், கா - பூம்பொழில்கள், கரைபு ஒழுகு தீம் புனற்கு - தமக்கு
விருந்தளித்த முழங்கி ஒழுகா நின்ற இனிய வையை நீருக்கு,
எதிர்விருந்து அயர்வ போல் - கைம்மாறாக எதிர்விருந்து
அளிப்பனபோன்று, தலைத்தலை மிகூஉம் சுரும்பு இமிர் தாதொடு -
மேலும் மேலும் நெருங்கா நின்ற வண்டுகள் முரலுதற்குக் காரணமான
பூந்தாதுகளுடனே, நரந்த நறுமலர் நன்கு அளிக்கும் - நரந்தம்போலக்
கமழும் நறிய மலர்களை மிகவும் வழங்காநிற்கும், கான் காவும் கயமும்
துருத்தியும் - நறுமணமுடைய பூம்பொழில்களினும் குளங்களினும்
ஆற்றிடைக் குறைகளிடத்தும், தேன் தேன் உண்டு பாட - வண்டுகள்
கள்ளுண்டு களித்து இசை பாடும்படி, பூநலம் திசைதிசை பூத்தன்று -
பூக்களாலே ஆகிய அழகு திசைகள் எங்கும் பொலியா நின்றது;
(வி-ம்.) செறு - (மருதநிலத்துக்) கழனிகள். கழனிகள்
விடுமலர்
சுமந்த நீர்புக்குப் பொலிதலானே அரங்கின் அழகினை ஒத்த அழகுடைய
வாயின என்க. இது, கழனிகட்கு அரங்கினைச் சிலேடை வகையால்
உவமை கூறியவாறு. இரண்டற்கும் பொதுத்தன்மை விடுமலர் சுமந்து பூநீர்
நிறைதல் ஆகும். ஆகவே, கழனிக்குக் கொள்ளுங்கால் அவிழ்ந்த
மலர்களைச் சுமந்து பொலிவுடைய (வையை) நீர் நிறைதலும், அரங்கிற்குக்
கூறுங்கால் ஆடன் மகளிர் கமலவர்த்தனை காட்டுங்கால் தூவிய
மலர்களைச் சுமந்து பூதர்க்கு இயற்றும் அருச்சனைப்பூவும் நீரும்
நிறைதலாகவும் கொள்க.
விடுமலர் - மலர்ந்த மலர்: தூவிய மலர். பூநீர்
- பொலிவுடைய
நீர்; பூவும் நீரும் கண் - இசைக்கருவிகளின் கண்ணும் துளையும் என்க.
படுகண் - இசைதோன்றும் கண் என்க. இமிழ் - இசை. கொளை -
பாட்டு. மக்கள் களியாட்டத்தின் பொருட்டே ஆடரங்கம்
இயற்றப்படுதலான் 'களி நாள் அரங்கு' என்றார். களிக்கும் நாளில்
இயற்றப்படும் அரங்கு என்க. அரங்கு - கூத்துமேடை. அணிநலம் -
ஒப்பனையழகு. புரையும்: உவமவுருபு.
கமலவர்த்தனை - ஆடலரங்கின் ஏறிய விறலியர் முதன்முறை
கைகாட்டுதல். முதன்முறை காட்டும் கை தாமரைமலர் வடிவிற்
காட்டப்படுதலான் இது கமலவர்த்தனை எனப்பட்டது. கமலவட்டனை
என்றும், வட்டணை என்றும் வழங்கும். இதனை "வலக்கால் முன்
மிதித்தேறி வலத்தூணைச் சேர்ந்து கைத்தலங் காட்டுதல் கமலவர்த்தனை'
என ஆசிரியர் நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணியின்கண் "காற்கொசி
கொம்புபோலப் போந்து கைத்தலங்கள் காட்டி" (காந்தரு - 119) எனவரும்
அடிக்கு வரைந்த நல்லுரையானும் |
|
|
|