பக்கம் எண் :

பரிபாடல்- வையை 266

      இது தன்னை வாயில் வேண்டிய தலைமகனுக்குத் தோழி, அவன்
வையையில் காதற்பரத்தையோடாடிய செய்தியையே பிறர் மேலிட்டுக்
கூறுகின்றாள் என உணர்க.

      குலமகளிர்க்காயின் இங்ஙனம் இழிந்தன கூறி அசதியாடல்
பொருந்தாமையும், பரத்தையர்க் காயின் பொருந்துதலும் உணர்க.

      பரத்தையோடு கூடும் ஆர்வ மிகுதியில் தேன்தேறல் பருகவும்
மறந்தான் என்னும் நயம் உணர்க. மருவ என்னும் செய்வனெச்சத் தீறு
கெட்டு மரு என நின்றது. இனியர் என்றது பரத்தையின் ஆய மகளிரை.
வையைக் கரையிற் றாம் அசதியாடியதனை இல்லிலுள்ள
முதுபரத்தையர்க்குக் கூறி நகைத்தற்பொருட்டுப் பூத்தனள் நங்கை
பொலிகென அம் முதுமகளிர் கேட்பத் தோழியர் கூறினர் என்க.
வாய்த்தன்று - வாய்த்தது. நாணும் தொழிலைச் செய்தது என்றவாறு.
ஆல்: அசை.

      (பரிமே.) இதுவும் வருகின்றனவும் காதற் பரத்தையைக் குறித்துக்
கூறியன.

32-38: மலையின் . . . . . . . . . வையைக் கியல்பு

      (இ-ள்.) மலையின் இழி அருவி - மலையினின்றும் இழிந்த அருவி
போந்து, கரைச் சார் சார் இணர் மல்கு மரம் சேர்ந்து கவினி -
வையையினது இரண்டு கரையிடந் தோறும் இடந்தோறும் உள்ளனவாகிய
பூங்கொத்துக்கள் நிறைந்த மரத்தைச் சேர்ந்து சேர்ந்து அவற்றது மலர்கள்
உதிரப்பெற்றமையாலே அழகு பெற்று மேலும், மடவார் கதுப்பினுள்
நனைசேர் தண்போதும் - தன்கண் ஆடுகின்ற கடப்பமுடைய மகளிர்
கூந்தலிலே நின்று சோர்ந்த தேன் சேர்ந்த குளிர்ந்த மலர்களும், மைந்தர்
மலர் மார்பின் சோர்ந்த மலரிதழ் தாஅய் - மைந்தர்கள் அகன்ற
மார்பினின்றும் சோர்ந்த மலர்களும் இதழ்களும் பரக்கப்பட்டு, ஆரம்பூத்த
மீன்வானம் நந்திய வியன் கங்கை பெயர்ந்த மருங்கு ஒத்தல் -
முத்துப்போன்று பூத்த மீன்களையுடைய விசும்பின் கண்ணதாகிய
பெருகிய அகன்ற கங்கை ஒழுகாநின்ற கூற்றை ஒத்தல், தேன் இமிர்
வையைக்கு எஞ்ஞான்று இயல்பு - வண்டுகள் இசைபாடா நின்ற
இவ் வையை யாற்றிற்கு எக்காலத்தும் இயல்பாகும்;

      (வி-ம்.) சார் - இடம் என்னும் பொருட்டு. இணர் மல்கு மரம்
என்க. கவினி - அழகெய்தி. நனை - தேன். கதுப்பு - கூந்தல்.
கதுப்பினின்றும் சோர்ந்த என முன்னும் சோர்ந்த என்பதனைக் கூட்டுக.
மலர் மார்பு: வினைத்தொகை. மலரிதழ்: உம்மைத்தொகை. ஆரம் -
முத்து. ஆரம்பூத்த மீன் - முத்துப்போன்று பூத்த விண்மீன். ஆரம்பூத்த
மீன் வானம் நந்திய வியன் கங்கை எனக் கூட்டுக. நந்திய - பெருகிய.
வியன் - அகன்ற; பெயர்ந்த. மருங்கு ஒத்தல் என்றது பெயர்ந்ததனை
ஒத்தல் என்றவாறு. கங்கையின் எழிற் கூறுகளுள் வைத்துப் பெயர்ந்த எழிற்