கூற்றினை ஒத்தல் என்பது கருத்து. வானக்கங்கையின்
நீரொழுக்கினை வையையின் நீரொழுக்கு என்றும் ஒக்குமென்க. தேன்
- வண்டு.
(பரிமே.) மீனாகிய முத்துப் பூத்து விளங்கிய வானத்தின்கட்
கங்கை
பெயர்ந்த கூற்றை ஒத்தலுடைமை.
39-47: கள்ளே .. . . . . . . இயல்பு
(இ-ள்.) ஒளிகிளர் உண்கண் கெண்டை - மகளிருடைய
ஒளிமிக்க
மையுண்ட கண்ணாகிய கெண்டைமீன், கள் புனல் புலவி இம் மூன்றினும்
- கள்ளுண்டமை நீரில் ஆடினமை தங்காதலரோடு ஊடினமை என்னும்
இம்மூன்று காரணங்களானும், ஒள் ஒளி சேய்தா - சிவந்த ஒள்ளிய நிறம்
மேலும் சிவவாநிற்பவும், பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும் -
பலவாகிய வரிகளையுடைய வண்டுக்கூட்டம் தமது வாயினில் சூழ்ந்து
மொய்க்கும் அழகுடனே, செல் நீர் வீவயின் தேன் சோர -
கூந்தலினின்று நீங்கும் நீர்மையுடைய மலரினின்றும் தேன்
துளியாநிற்பவும், பல்நீர் ஆடுவார் அடுத்தடுத்துப் புல்ல - ஒரு தலைவன்
மிக்க நீரின்கண் ஆடும் பரத்தையரை மீண்டும் மீண்டும் தழுவுதலானே,
குழைந்து வடுப்படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான் - நெகிழ்ந்து
அழிந்ததும் அழியாததுமாகிய கத்தூரிக் குழம்பு பொருந்திய
மார்பையுடையவனான அத் தலைவன் தோற்றம், எடுத்த வேய்
- பனியாலே வளைந்து நின்று அப் பனிப்பாரம் உலர்ந்தவுடனே
காற்றானே எடுக்கப்பட்ட மூங்கில், நூக்கு உயர்பு - அக் காற்றின்
தள்ளுதலானே உயர்ந்து, தாக்கத் தொடுத்த தேன் சோரும் வரை
தோற்றம் போலும் - தாக்குதலானே தன்பால் தொடுக்கப்பட்ட தேன்
உடைந்து ஒழுகாநின்ற மலையினது தோற்றத்தை ஒக்கும், கொடித்தேரான்
வையைக்கு இயல்பு - இங்ஙனம் தோன்றச் செய்தல் வெற்றிக்கொடியை
யுடைய பாண்டியனது வையையாற்றின் இயல்பாம்;
(வி-ம்.) இதுவும் தோழி தலைவன் காதற்பரத்தையரோடு
நீராடியதனைப் பிறர்மேலிட்டுக் கூறிக் குறிப்பால் வாயின்மறுத்த படியாம்.
பரத்தையர் கண் மிகச் சிவக்கும்படியும் அவர் கூந்தலினின்று
நெகிழும் மலர் தேன் சிந்தவும், நீராடாநின்ற அவரை அடுத்தடுத்துப்
புல்லுதலானே வடுப்பட்ட அகலத்தான் தோற்றம் வரைத் தோற்றம்
போலும்; அங்ஙனம் தோன்றச் செய்தல் வையைக்கு இயல்பு என்க.
கள் நீர் புலவி ஆகிய மூன்றேதுக்களானும் முன்னரே
சிவந்தகண்
மேலும் சிவக்கப் புல்ல என்க.
கள் முதலியன கண்சிவக்கும்படி செய்தல் இயல்பு. கட்கெண்டை
- கண்ணாகிய கெண்டை ஒளி சேய்தாக என்க. என்றது கெண்டையை
ஒத்த கண் சிவக்க என்றவாறு. |
|
|
|