பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்270

பதினேழாம் பாடல்
-----

செவ்வேள்

பொருட் சுருக்கம்

      1-8: கோல்விளக்கையும் (தீவர்த்தி), இசைக் கருவிகளையும், சந்தன
முதலிய நறுமணப் பொருள்களையும், புகையையும், கொடிகளையும் சிலர்
ஏந்திவரத் தாம் மலர் தளிர் பூந்துகில் மணி வேல் முதலியவற்றைச்
சுமந்துவந்து கடிமரத்தை ஏத்தி இசைபாடி மாலைதொறும்
திருப்பரங்குன்றத்தின் அடியில் தங்குவோருள் வானுலகத்தில் உறைதலை
விரும்புவார் உளரோ;

      9-21: அத் திருப்பரங்குன்றத்தின்கண் ஒருசார் யாழிசை எழும்:
அதற்கு மாறாக ஒருசார் வண்டிசை எழும்; ஒருசார் குழலிசை எழும்;
அதற்கு மாறாக ஒருசார் தும்பியிசை எழும்; ஒருசார் முழவு முழங்கும்;
அதற்கு மாறாக ஒருசார் அருவி முழங்கும்; ஒருசார் விறலியர் ஆடுவர்;
அவர்க்கு மாறாக ஒருசார் பூங்கொடிகள் ஆடும்; ஒருசார் பாடினி பாடும்
பாலைப் பண்ணினது நிறைகுறைகள் தோன்றும்; அதற்கு மாறாக மயிலின்
நிறைகுறை அரிக்குரல் தோன்றும். இங்ஙனமாக அக்குன்றம் கல்விகட்கு
மாறுபாட்டினை உடைத்தாகும்.

      22-25: மதுரைக்கும் திருப்பரங்குன்றத்திற்கும் இடையே உள்ள
நிலம் மிக அணித்தாயினும், மகளிரும் மைந்தரும் நெருங்கி
விளையாடுதலால் மிகச் சேய்த்தாகாநின்றது.

      26-32: அம் மகளிர் மைந்தருடைய மாலைகள் வீழ்ந்தமையால்
செல்லும்வழி இல்லையாயிற்று; அக் குன்றின்கண் உலகத்தார் செய்யும்
பூசைக்கண் முருகன் ஆவியாகக்கொள்ளும் அகிற்புகை வானுலகத்தும்
பரவுதலானே தேவர்கள் இமையா நிற்பர்; ஞாயிற்று மண்டிலமும் அப்
புகையால் மறையும்.

      33-39: வளையல் அணிந்த மகளிரும், அவர்தம் காதலராகிய
மைந்தரும், மகிழ்ந்து கூடிப் பாய்ந்து ஆடுதலானே, சுனையின்கண்
வண்டுகள் அஞ்சித் தாதூதாவாயின; திருப்பரங்குன்றின் அணி
அத்தகையது.

      40-41: பரங்குன்றினின்றும் இடையறாது வீழும் அருவி நீர் உழவர்
வயலின்கட் பாய்ந்து பரவாநிற்கும்; மேல் விளையாடும்