பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்272

   பாடல் சான்று பல்புகழ் முற்றிய
   கூடலொடு பரங்குன்றினிடைக்
   கமழ்நறுஞ் சாந்தின் அவரவர் திளைப்ப
25 நணிநணித் தாயினுஞ் சேஎய்ச் சேய்த்து (25)
   மகிழ்மிகுதேஎங் கோதையர் கூந்தல் குஞ்சியிற்
   சோர்ந்தவிழ் இதழின் இயங்குமா றின்று
   வசைநீங்கிய வாய்மையால் வேள்வியால்
   திசைநாறிய குன்றமர்ந் தாண்டாண்
30 டாவி யுண்ணும் அகில்கெழு கமழ்புகை (30)
   வாய்வாய் மீபோய் உம்பர் இமைபிறப்ப
   தேயா மண்டிலங் காணுமா றின்று
   வளைமுன்கை வணங்கிறையார்
   அணைமென்றோள் அசைபொத்தார்
35 தார்மார்பிற் றகையியலார் (35)
   ஈரமாலை இயலணியார்
   மனமகிழ் தூங்குநர் பாய்புட னாடச்
   சுனைமலர்த் தாதூதும் வண்டூத லெய்தா
   அனையபரங் குன்றின் அணி;
40 கீழோர், வயல்பரக்கும் வால்வெள்ளருவி பரந்தானாதரோ
   மேலோர், இயங்குதலால் வீழ்மணிநீலம் செறுவுழக்குமரோ
   தெய்வ விழவுந் திருந்து விருந்தயர்வும்
   அவ்வெள் ளருவி அணிபரங் குன்றிற்கும்
   தொய்யா விழுச்சீர் வளங்கெழு வையைக்கும்
45 கொய்யுளை மான்றேர்க் கொடித்தேரான் கூடற்கும்
   கையூழ் தடுமாற்ற நன்று;
   எனவாங்கு
   மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப்
   பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ
50 பணியொரீஇ நின்புகழ் ஏத்தி
   அணிநெடுங் குன்றம் பாடுதுந் தொழுதும்
   அவை, யாமுமெஞ் சுற்றமும் பரவுதும்
   ஏம வைகல் பெறுகயாம் எனவே.
கடவுள் வாழ்த்து
நல்லழிசியார் பாட்டு; நல்லச்சுதனார் இசை; பண் நோதிறம்.