"மகரத்தின் ஒற்றாற் சுருதி விரவும்
பகரும் குறினெடில்பா ரித்து - நிகரிலாத்
தென்னா தெனாவென்று பாடுவரேல் ஆளத்தி
மன்னாவிச் சொல்லின் வகை."
"முதலிற் பாடுமிடத்து மகரத்தின் ஒற்றாலே நாதத்தை உச்சரிக்கும் மரபு
பகரில் பாரித்து முற்கூறிய நாதத்தினைத் தொழில் செய்யுமிடத்துக்
குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலுஞ் செய்யப்படும்."
"அவை அச்சு பாரணை என்று பெயர்பெறும்; அச்சுக்கு எழுவாய்
குற்றெழுத்து. பாரணைக்கு எழுவாய் நெட்டெழுத்து. அச்சு, தாளத்துடன்
நிகழும். பாரணை, கூத்துடன் நிகழும்."
ஆளத்தி செய்யுமிடத்துத் தென்னாவென்றும், தெனாவென்றும்
இரண்டசையுங் கூட்டித் 'தென்னாதெனா என்று பாடப்படும்; இவை தாம்.
"காட்டாளத்தி நிறவாளத்தி பண்ணாளத்தி என மூன்று வகைப்படும்"
எனவரும் சிலப்பதிகாரத்தின்கண் அரங்கேற்று காதை 26 ஆம் அடிக்கு
அடியார்க்கு நல்லார் எழுதிய விளக்கவுரையானும் உணர்க. இஃது
இக்காலத்தே 'ஆலாபனம்' என்று வழங்கப்படும்.
திருப்பரங்குன்றத்தின் வளப்பம் தெரித்தோதுவார், "விரிமலர் மதுவின்
மரநனை குன்றம்" என்றார்.
கோலெரி முதலியன ஒருங்கெழத் தேம்படு மலர் முதலியன சுமந்து வந்து
கடிமரம் பரவினராய்ப் பண்ணினராய்க் குன்றத்தின் அடியின்கண்
மாலைதோறும் உறைவோர் வானுலகத்தையும் விரும்ப மாட்டார் என்பது
கருத்து.
மேலோர் - வானவர்; உறையுளும் என்புழி உம்மை சிறப்பு.
(பரிமே.) 6. கோலெரி - தீபம்.
எழ எனவும் சுமந்து எனவும் நின்ற வினையெச்சங்களும் பரவினர்
இசையினர் என்னும் முற்றுவினையெச்சங்களும் இயைநர் என்னும்
தொழிற்பெயருள் இயைதலோடு முடிந்தன.
9-21: ஒருதிறம் . . . . . . . குன்றம்உடைத்து
(இ-ள்.) (21) மாறு அட்டான் குன்று - பகைவரை வென்றருளிய
முருகவேளினது திருப்பரங்குன்றம், ஒருதிறம் பாணர் யாழின் தீம் குரல்
எழ - ஒரு பக்கத்தே பாணருடைய யாழின் இனிய இசை எழாநிற்ப, ஒரு
திறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ - மற்றொருசார் பூக்களாகிய
புதுவருவாயினையுடைய வண்டுகளினது முயற்சியாலுண்டாகிய இசை
எழா நிற்ப, ஒருதிறம் கண் ஆர் குழலின் கரைபு எழ - மற்றொருசார்
கணுப்பொருந்திய வேய்ங்குழலின் இசை எழாநிற்ப, ஒருதிறம் தும்பி
பண் ஆர் பரந்த இசை ஊத - மற்றொருசார் வண்டுகள் பண் போன்று
பாவாநின்ற இசையை முரலாநிற்ப, ஒருதிறம் மண் ஆர் முழவின் இசை
எழ - மற்றொருசார் மண்பூசப்பெற்ற |
|
|
|