47-53: எனவாங்கு . . . . . . . எனவே
(இ-ள்.) என - என்றிவ்வாறு, மணிநிற மஞ்ஞை ஓங்கிய
புள் கொடி
பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ - நீலமணி போலும் நிறமுடைய
மயிலினையும் உயர்ந்த கோழிக்கொடியினையும் பிணிமுகம் என்னும்
யானையை ஊர்ந்து செய்யப்பட்ட வெற்றியுடைய போரினையும் உடைய
இறைவனே, யாமும் எம் சுற்றமும் - யாங்களும் எம்முடைய சுற்றத்தாரும்,
பணி ஒரீஇ - எம்மை ஒத்த மனிதரை எய்தி அவரைப் புகழ்ந்து பாடும்
பணிவுடைய மொழியினை ஒழிந்து, நின் அணி நெடுங் குன்றம் பாடுதும்
- இனி எப்பொழுதும் நின்னுடைய அழகிய நெடிய திருப்பரங்குன்றத்தைப்
பாடி, நின் புகழ் ஏத்தித் தொழுதும் பரவுதும் - நினது புகழையே ஏத்தித்
தொழுது வேண்டிக் கொள்ளா நிற்போம், அவை யாம் ஏம வைகல் பெறுக
என - அங்ஙனம் பாடுதலும் தொழுதலும் பரவுதலும் எற்றுக்கெனின் யாங்கள்
பிறவித்துன்பம் சாராத இன்பநிறைந்த நாளைப் பெறுக என்றேயாம்;
(வி-ம்.) மணி - நீலமணி. மஞ்ஞை - மயில். புள்
என்றது ஈண்டுக்
கோழிச் சேவலை என்க. பிணிமுகம் - முருகன் ஏறும் யானை. ஊர்ந்து
செய்யப்பட்ட போர் என்க. பணி - பணிவுடைமையைக் காட்டும் முகமன்
மொழி. அவை "மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக் கிவனென்றும், கொடுக்கிலா
தானைப் பாரியே என்றும்" கூறும் புன்மொழிகள்,
அங்ஙனம் தம்மையே ஒத்த சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினாராகிய மனிதரைப்
பொய்யே புகழ்ந்த விடத்தும் அவர் கொடுத்தலும் இல்லை. ஒரோவழிக்
கொடுப்பினும் அப்பொருள் போதப் பயன்றருதலும் இல்லை. ஆதலின்,
இப் பேதைமைத் தொழிலை இனி அறவே ஒழித்து இம்மை யின்பமும்
மறுமை யின்பமும் அந்தமிலின்பத்து வீட்டின்பமும் தரவல்ல நின்னையே
ஏத்தித் தொழுவேம். அவற்றுள்ளும் நிலையுதலில்லாத இம்மை மறுமை
யின்பங்களைப் பெறுதல் எம் கருத்தன்று; என்றென்றும் நிலைத்த
நின்திருவடியின்பமே யாங்கள் பெறக்கருதி இறைஞ்சுகின்றோம் என்றவாறு.
இதனோடு,
"உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன்செல்வத்தை
வளனா மதிக்கும் இம்மானிடத்தைக் கவிபாடியென்"
என்றும்,
"ஒழிவொன் றில்லாத பல்லூழிதோ றூழிநிலா வப்போம்
வழியைத் தரும் நங்கள் வானவ ரீசனை நிற்கப்போய்
கழியமிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்
இழியக் கருதி ஓர்மானிடம் பாடல் என்னாவதே"
என்றும், |
|
|
|