38-50: அழகிய முகில்கள் முன்பனிக்காலத்தில் முழங்கி
இந்திரவில்லை வளைத்தது; நினது பரங்குன்றத்திலுள்ள மரங்கள்
அவ் வில்லால் சொரியப்படும் அம்புகளைப்போல மெல்லிய மலரைப்
பரப்பின; அக் குன்றத்தின்கண் தாள வொலியும் இசைக் கருவிகளின்
முழக்கமும் முகில் முழக்கமும் போர்முழக்கம் போன்று எழுந்தன;
அருவிகள் ஒலித்து விழுதலானே சிகரங்கள் முத்து மாலை
அணிந்தனபோன்றுள்ளன; குருவிகள் ஆரவாரிக்கும்படி தினைகள்
விளைந்தன; சுனைகள் கரையினின்று சாய்ந்த கொறுக்கைச்சியால்
முட்டப்பட்ட பன்னிறமலர்கள் நிறைதலால் இந்திரவில்லை வளைத்த
வானத்தை ஒத்து வண்டூதும் அழகுடையவாயின.
51-56: வேற்படையையுடைய செல்வனே! நினது பூசையின்கண்
எழுப்பப்பட்ட யாழிசையும், புலவர் பாடிய இயற்பாட்டொலியும்,
வேதவொலியும், பூவும் புகையும் விளக்கும் ஆகிய உபசாரங்களை
ஏற்றருளிய நின் அடியின்கண், எனக்குரிய ஊரின்கண் உறையுமாறுபோல,
எம் சுற்றத்தோடு கூடி யாம் உறைதலை என்றும் பிரியே மாகுக.
போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தபக்
காரெதிர்ந் தேற்ற கமஞ்சூல் எழிலிபோல்
நீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச்
சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்நின்
5 சீர்நிரந் தேந்திய குன்றொடு நேர்நிரந்
தேறுமா றேற்குமிக் குன்று;
ஒள்ளொளி மணிப்பொறி யான்மஞ்ஞை நோக்கித்தன்
உள்ளத்து நினைப்பானைக் கண்டனள் திருநுதலும்
உள்ளிய துணர்ந்தேனஃ துரையினி நீயெம்மை
10 எள்ளுதன் மறைத்தலோம் பென்பாளைப் பெயர்த்தவன்
காதலாய் நின்னியல் களவெண்ணிக் களிமகிழ்
பேதுற்ற இதனைக்கண் டியானோக்க நீயெம்மை
ஏதிலா நோக்குதி என்றாங்கு உணர்ப்பித்தல்
ஆய்தேரான் குன்ற வியல்பு;
15 ஐவளம் பூத்த அணிதிகழ் குன்றின்மேல்
மைவளம் பூத்த மலரேர் மழைக்கண்ணார்
கைவளம் பூத்த வடுவொடு காணாய்நீ
மொய்வளம் பூத்த முயக்கம்யாங் கைப்படுத்தேம்
மெய்வளம் பூத்த விழைதகு பொன்னணி
|
|
|
|