பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்284

20 நைவளம் பூத்த நரம்பியைசீர்ப் பொய்வளம்
   பூத்தன பாணாநின் பாட்டு;
   தண்டளிர் தருப்படுத் தெடுத்துரைஇ
   மங்குன் மழைமுழங்கிய விறல்வரையால்
   கண்பொருபு சுடர்ந்த டர்ந்திடந்
25 திருள்போழுங் கொடிமின்னால்
   வெண்சுடர் வேல்வேள் விரைமயின்மேல் ஞாயிறுநின்
   ஒண்சுடர் ஓடைக் களிறேய்க்கு நின்குன்றத்
   தெழுதெழில் அம்பலங் காமவே ளம்பின்
   தொழில்வீற் றிருந்த நகர்;
30 ஆர்ததும்பும் மயிலம்பு நிறைநாழி
   சூர்ததும்பு வரைய காவால்
   கார்ததும்பு நீர்ததும்புவன சுனை
   ஏர்ததும்புவன பூவணி செறிவு
   போர்தோற்றுக் கட்டுண்டார் கைபோல்வ கார்தோற்றும்
35 காந்தள் செறிந்த கவின்;
   கவின்முகை கட்டவிழ்ப்ப தும்பிகட் டியாழின்
   புரிநெகிழ்ப்பார் போன்றன கை;
   அச்சிரக் காலார்த் தணிமழை கோலின்றே
   வச்சிரத் தான்வான வில்லு;
40 வில்லுச்சொரி பகழியின் மென்மலர் தாயின
   வல்லுப்போர் வல்லாய் மலைமேன் மரம்
   வட்டுருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டுச்
   சீர்ததும்பு மரவமுடன் சிறந்து
   போர்ததும்பு மரவம் போலக்
45 கருவி யார்ப்பக் கருவிநின்றன குன்றம்
   அருவி யார்ப்பமுத் தணிந்தனவரை
   குருவி யார்ப்பக் குரல்குவிந்தன தினை
   எருவை கோப்ப எழிலணி திருவில்
   வானி லணித்த வரியூதும் பன்மலராற்
50 கூனி வளைத்த சுனை;
   புரியுறு நரம்பு மியலும் புணர்ந்து
   சுருதியும் பூவுஞ் சுடருங் கூடி
   எரியுரு ககிலோ டாரமுங் கமழும்