இனி, முருகவேளைப் படர்க்கையாக்கி இம் மலைச்சிறப்புக்
கூறுகின்றார்.
7 - 14: ஒள்ளொளி . . . . . . . . .இயல்பு
(இ-ள்.) ஒள்ஒளி மணிப்பொறி ஆல் மஞ்ஞை நோக்கித்
தன்
உள்ளத்து நினைப்பானை - ஒரு கானவன் ஒள்ளிய நிறத்தினையுடைய
மணிபோன்ற புள்ளியினையுடையதாய் ஆடாநின்றதொரு மயிலை நோக்கி
அதன் அழகையும் களிப்பினையும் தன் உள்ளத்தால் குறிக்கொண்டு
கருதி நின்றானாக அங்ஙனம் நின்றவனை, திருநுதலும் கண்டனள் -
அவன் காதலியாகிய அழகிய நெற்றியினையுடைய கொடிச்சியும்
கண்டாள், இனி உள்ளியது உணர்ந்தேன் நீ எம்மை எள்ளுதல் மறைத்தல்
ஓம்பு அஃது உரை என்பாளை - அங்ஙனம் கண்டவள்
அவனை நோக்கி 'ஏடா நீ இப்பொழுது நின் உள்ளத்தே நினைப்பதனை
யாம் அறிந்துகொண்டேம் அஃதியாதெனின், நீ இம் மயில் இவளினும்
எழிலிற் சிறந்தது என்று நினைக்குமாற்றால் எம்மை இகழ்வதேயாம்;
ஏடா அதனை மறைத்தல் ஒழிக இனி அதனை எமக்குச் சொல் என்று
ஊடினாள் அங்ஙனம் ஊடியவளை, அவன் பெயர்த்துக் காதலாய் நின்
இயல் கழிமகிழ் களவு எண்ணிப் பேதுற்ற இதனைக் கண்டு யான்
நோக்க - அக் கானவன் அதனை மாற்றிக் காதலுடையோயே தன்னால்
களவுகொள்ள அரிதாகிய நினது சாயலைத் தனது களிப்பு மகிழ்ச்சியாலே
களவுகொள்ள எண்ணி அஃதியலாமையாற் பெரிதும் வருந்தும்
இம் மயிலினைக் கண்டு நினது சாயலின் அருமையையே நினைத்து
நின்றேனாக, நீ எம்மை ஏதிலா நோக்குதி - நீ அஃதறியாது எம்மை
இகழ்ந்தேமாகக் கருதுகின்றனை, என்று ஆங்கு உணர்ப்பித்தல் - என்று
கூறி அவ் வூடலை அப்பொழுதே உணர்ப்பித்தல், ஆய்தேரான் குன்ற
இயல்பு - கண்டோர் நன்றென்று ஆராய்தற்குக் காரணமான
தேரினையுடைய முருக வேளினது இத் திருப்பரங்குன்றத்தின் இயல்பு
இத்தகையது ஆகும்;
(வி-ம்.) குறிஞ்சி நிலமாதல்பற்றிக் 'கானவன்'
என்றார்
உரையாசிரியர். ஒள்ளொளி - மிக்க ஒளி. பொறி - புள்ளி. மணிப்பொறி:
உவமத்தொகை. ஆல்மஞ்ஞை: வினைத்தொகை: ஆடா நின்ற மயில்
என்க. அதன் அழகையும் களிப்பையும் நினைந்து நின்றான் என்க.
திருநுதல் அம் மயிலையும் அதனை நோக்குபவனையும் கண்டாள்
என்பார் இறந்தது தழீஇய எச்சஉம்மை கொடுத்துத் 'திருநுதலும்
கண்டனள்' என்றார். நான் உணர்ந்துகொண்டேன், இனி, நீ அதனை
மறைத்துப் பயனிலை; ஆதலால் மறைத்தல்ஒழி; உண்மையை உரை
என்றவாறு. அவன் பெயர்த்து என மாறுக, எம் மழகினும் இம் மயில்
அழகு மிக்குடையதென்றன்றோ எம்மை நோக்காது அதனை நோக் |
|
|
|