பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்287

கினை; இவ்வாற்றால் நீ எம்மை இகழ்ந்தனையல்லையோ என்று ஊடினள்
என்க. இயல் - சாயல். அஃதாவது: மாதர் உருவிற் கிடப்பதொரு
மென்மை. களிமகிழ் உடைமையால் ஆராயாது களவுகொள்ள எண்ணி
அஃதியலாமையால் வருந்துமிதனை என்க. இதனை - இம் மயிலை. யான்
அதன் அறியாமையையும் நின் சாயலருமையையும் நினைந்து நின்றேனாக
என்றான் என்க. யான் என்னும் ஒருமை எம்மை என்னும் பன்மையொடு
மயங்கியது ஒருமைப்பன்மை மயக்கம். பேது - துன்பம்; அறியாமையுமாம்.
ஏதிலா - அயன்மையாக, என்றது இகழ்ந்தேமாக என்றவாறு. என்று
பணிமொழி பலகூறி உணர்ப்பித்தல் என்க.

ஆய்தேரான் என்றது முருகவேளை. தேர்த் திருவிழா வெடுத்தலின்
'ஆய்தேரான்' என்றார் என்க.

'இக் குன்றம் தன்பாற் குறிஞ்சி ஒழுக்கமேயன்றி மருதவொழுக்கமு
முடையதென்பார் இக் குன்றவியல்பு' என்றார்.

இப் பகுதியிற் கூறிய புலவி நுணுக்கத்தின் அருமையோடு,

"நினைத்திருந்து நோக்கினுங் காயு மனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீ ரென்று" (1320)
எனவரும் அருமைத் திருக்குறளையும் நினைக.

15-21: ஐவளம் . . . . . . . . பாட்டு

      (இ-ள்.) மெய் வளம் பூத்த விழைதகு பொன் அணிபாணா -
உடம்பு அழகுற்றுப் பொலிதற்குக் காரணமான விரும்பத் தகுந்த
பொன்னாலாகிய அணிகலன்களை அணிந்த பாணனே, ஐவளம் பூத்த
அணிதிகழ் குன்றின் மேல் - தனக்குரிய ஐந்து வளமுமிக்குப் பொலிந்த
அழகு விளங்காநின்ற இத் திருப்பரங்குன்றின்மேல் வாழாநின்ற, மைவளம்
பூத்த மலர்ஏர் மழைக்கண்ணார் - மையிட்டமையானே அழகுமிக்குப்
பொலிந்த தாமரை மலரை ஒத்த குளிர்ந்த கண்ணையுடைய மகளிரது,
மொய் வளம் பூத்த முயக்கம் - இறுகல் மிக்க முயக்கத்தை, கைவளம்
பூத்த வடுவொடு யாம் கைப்படுத்தேம் - தலைவன் மெய்யின்கண்
கிடந்த அப் பரத்தையரது உகிர்செய்த வடுவினாலேயாம் நன்கு
அறிந்துகொண்டோம், நீ காணாய் - அதனை நீ கண்டிலையோ, நின்
நைவளம் பூத்த நரம்பு இயைசீர்ப் பாட்டுப் பொய்வளம் பூத்தன -
நின்னுடைய நட்டபாடை என்னும் பண்ணைத் தருகின்ற யாழ்நரம்பிற்கு
இயைந்த தாளத்தையுடைய பாட்டு, நின்னையல்லது பரத்தைமையான்
அல்லன் தலைவன் என்னும் பொருளோடு புணர்தலானே
பொய்ம்மிகுதியை உணர்த்தின;

      (வி-ம்.) ஐவளம் - ஐந்துவகையான மலைதரும் பொருள். அவை:
அரக்கு இறலி செந்தேன் மயிற்பீலி நாவி என்பனவாம். இறலி
என்னுமிடத்து 'உலண்டு' என்று கூறுவாருமுளர். உலண்டு - பட்டுப்புழு.
பூத்த - பொலிவுபெற்ற; மை - கண்ணுக்கிடும் மை