என்க. ஏர்: உவம உருபு. மழைபோலும்
குளிர்ந்த கண்ணார் என்க.
என்றது பரத்தையரை. கை: ஆகுபெயரான் உகிர் என்னும் பொருள்
குறித்து நின்றது. கைப்படுத்தேம் என்றது, நன்கு உணர்ந்தேம் என்றவாறு.
நீ காணாய் என்றதனை எடுத்தோதி வினாவாக்குக. அதனைக்
கண்டனையேல் இங்ஙனம் பொய்கூறுவாயல்லை என்றிகழ்ந்தவாறு. நின்
மெய்வளம் பூத்ததே அன்றி உள்ளம் வளம் பூத்ததன் றென்பாள்
மெய்வளம்பூத்த பொன் அணி பாணா' என்றாள். இத்தகைய
பொன்னணியைத் தலைவன்பாற் பரிசிலாகப் பெறுதல் கருதியே
அவனைப் புகழ்ந்து பாடுகின்றனை என இடித்துரைத்தாளுமாயிற்று.
கேள்விக் கின்னாத பொய்யினைக் கேள்விக்கினிய இசையோடுகூட்டிக்
கெடுத்தொழிந்தாய் என்பாள், 'நின் நைவளம் பூத்த நரம்பியை
சீர்ப்பாட்டு, பொய்வளம் பூத்தன' என்றாள். நைவளம் - நட்டபாடை
என்னும் பண். நரம்பு - யாழ்நரம்பு.
தலைவன் பரத்தமையுடையதனால் யாம் காட்சியளவையானே
கண்டனம் ஆகவும் நீ தலைவன் தூயன் பரத்தமையுடையான் அல்லன்
என்னும் பொருளை இயைத்துப் பாடா நின்றனை, ஆதலின் நின் பாட்டுப்
பொய்ம் மிக்கது என்றவாறு.
(பரிமே.) மலைவளம் ஐந்தாவன: "அரக்கிறலி செந்தேன்
அணி
மயிலின் பீலி திருத்தகு நாவியோ டைந்து" என்பதனாலறிக.
இது பாணனுக்குத் தலைவன் பரத்தமை கூறுகின்றாளொரு
தலைவி
கூற்று. இதனால் அத்தன்மைத்தாகிய இன்பத்ததென்பது பெறப்பட்டது.
இனி, அவனை எதிர்முகமாக்கி:
22 - 29: தண்டளிர் . . . . . . . . . .நகர்
(இ-ள்.) வெண் சுடர் வேல் வேள் விரை மயில்மேல்
ஞாயிறு -
வெள்ளிய ஒளியுடைய வேற்படை யேந்திய செவ்வேளே! விரைந்த
செலவினையுடைய மயிலின்மேல் ஏறிவரும் கடவுள் ஞாயிறே! , தண்
தளிர் தருப்படுத்து எடுத்துரைஇ மழை முழங்கிய விறல் தரையால் -
குளிர்ந்த தளிரை மரங்களிலே தோற்றுவித்து அச்செயலை உலகத்தார்க்கு
எடுத்துக் கூறுமாறுபோல இருண்ட முகில்கள் முழங்காநின்ற சிகரமும்,
கண்பொருபு சுடர்ந்து அடர்ந்து இருள் இடந்து போழும் கொடி மின்னால்
- காண்போர் கண்களை மழுக்கிச் சுடர்விட்டு நெருங்கி இருளைப்
பெயர்த்துப் பிளக்கும் கொடிமின்னலும், நின் களிறு ஒண்சுடர் ஓடை
ஏய்க்கும் - நினது பிணிமுகம் என்னும் களிற்று யானையையும் அதன்கண்
அணியப்பட்ட ஒள்ளிய ஒளியுடைய நெற்றிப் பட்டத்தையும் ஒத்தற்கு
இடமான, நின் குன்றத்து எழுது எழில் அம்பலம் - நின்னுடைய
திருப்பரங்குன்றத்தின்கண் ஓவியம் எழுதப்பட்ட அழகையுடைய
அம்பலம், காமவேள் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர் - காமவேளினது
அம்பினது ஏவுதற்றொழில் நிலைபெற்றிருந்த சிரமீச்சாலையை ஒக்கும்; |
|
|
|