பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்29

பொன்னாடை யுடையோனே! வலம்புரிவண்ணனே!
ஆழிப்படையோனே!மல்லனே! திருமகள் கணவனே!
மறவனே நினது ஆழியே உலகிற்கு நிழலாவது.
   மாஅ யோயே மாஅ யோயே
   மறுபிறப் பறுக்கு மாசில் சேவடி
   மணிதிக ழுருபின் மாஅ யோயே
   தீவளி விசும்பு நிலனீ ரைந்து
 5 ஞாயிறுந் திங்களு மறனு மைவரும்
   திதியின் சிறாரும் விதியின் மக்களும்
   மாசி லெண்மரும் பதினொரு கபிலரும்
   தாமா இருவருந் தருமனு மடங்கலும்
   மூவே ழுலகமும் உலகினுள் மன்பதும்
10 மாயோய் நின்வயிற் பரந்தவை யுரைத்தேம்
   மாயா வாய்மொழி யுரைதர வலந்து
   வாய்மொழி யோடை மலர்ந்த
   தாமரைப் பூவினுட் பிறந்தோனுந் தாதையும்
   நீயென மொழியுமா லந்தணர் அருமறை
15 ஏஎர், வயங்குபூண் அமரரை வௌவிய வமிழ்திற்
   பயந்தோ ளிடுக்கண் களைந்த புள்ளினை
   பயந்தோ ளிடுக்கண் களைந்த புள்ளின்
   நிவந்தோங் குயர்கொடிச் சேவ லோய்நின்
   சேவடி தொழாரு முளரோ அவற்றுட்
20 கீழே ழுலகமு முற்ற வடியினை
   தீசெங் கனலியுங் கூற்றமு ஞமனும்
   மாசிலா யிரங்கதிர் ஞாயிறுந் தொகூஉம்
   ஊழி யாழிக்க ணிருநில முருகெழு
   கேழலாய் மருப்பி னுழுதோ யெனவும்
25 மாவிசும் பொழுகுபுனல் வறவ வன்னச்
   சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோ யெனவும்
   ஞாலத் துறையுள தேவரும் வானத்து
   நாலெண் தேவரும் நயந்துநிற் பாடுவார்
   பாடும் வகையேயெம் பாடல் தாமப்
30 பாடுவார் பாடும் வகை
   கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்