பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்294

நின்னை ஏத்திப்புகழ்ந்துகொண்டே வந்தனர்; சிலர் தம்மோடு வந்த
யானைகளை வழியினின்றும் அகற்றி மரங்களில் கட்டி அவற்றிற்குக்
கரும்பை முறித்துக் கொடுத்தனர்; சிலர் குதிரைகளை வழியினின்றும்
அகற்றினர்; சிலர் தேர்களை வழியினின்றும் அகற்றினர்; இவற்றால் நின்
திருப்பரங்குன்றத்தின் கீழுள்ள நிலப்பரப்புப் பாசறை போலத்
தோன்றிற்று.

      38 - 45: பாண்டியனுடன் மலைமீதேறிச் சென்றவருள் சிலர்
குரங்குகளுக்குத் தின்பண்டம் வழங்கினர்; சிலர் முசுக்கலைகளுக்குக்
கரும்பை வழங்கினர்; சிலர் பிரமவீணை யென்னும் இசைக்கருவியை
இயக்கினர்; சிலர் குழல் ஊதினர்; சிலர் யாழியக்கினர்; சிலர் பூசைச்
சிறப்பைப் புகழ்ந்தனர்; சிலர் முரசை முழக்கினர்.

      46 - 57: இவர்கள் இங்ஙனமிருப்ப, வேறுசிலர் அக்குன்றத்திலுள்ள
எழுத்துநிலை மண்டபத்தினுள் புகுந்து அங்குத் தீட்டப்பட்ட
ஓவியங்களைக் கண்டு களிப்பாராயினர்; சிலர், துருவ சக்கரத்தைப்
பொருந்திவரும் ஞாயிறு முதலிய கோள்களின் நிலைமைகளை விளக்கும்
ஓவியத்தைக் கண்டு நின்றனர்; சிலர் தம் மனைவியர் தம்மை
வினவுந்தோறும், அவ் வோவியங்களைச் சுட்டிக்காட்டி இவள் இரதி;
இவன்றான் காமன் என்றும், இப் பூனை, இந்திரன் கொண்ட
பூனையுருவம்; இவள் அகலிகை; இவன் கௌதமன்; இவன் சினத்தலாலே
கல்லுருப்பெற்ற அகலிகை உரு இது என்று விளக்கம் கூறா நின்றனர்;
இவ்வாறு வினவவும் விடையிறுப்பவும் இத்தகைய பற்பல சித்திரம் தீட்டப்
பெற்ற மண்டபங்களை உடைய மங்கல நிலை உடையது
இப் பரங்குன்றம்.

      58 - 66: பேதைப் பருவத்தாள் ஒருத்தி, தன் உறவினரிடமிருந்து
பிரிந்து போய்விட்டாள்; அவள் அவ்வுறவினரைக் காண்டல் கருதி
அக் குன்றத்திலுள்ள கற்களிடையே புகுந்து 'ஏஎ' ஓஒ' என்று
கூப்பிட்டாள்; அக் கற்களினின்றும் 'ஏஎ' 'ஓஒ' என்ற எதிரொலி
எழுந்தது; அஃது எதிரொலி என்பதை உணராத அச்சிறுமி, அவ்வொலி
தன் உறவினர் தன்னைக் கூப்பிடும் ஒலி எனக் கருதி அவ்வொலி
எழுமிடனெல்லாம் சென்று சென்று தடுமாறா நின்றாள்; இவ்வாறு
திருப்பரங்குன்றம் சிறுவர்க்கு மடமை செய்யா நின்றது.

      67 - 74: நெடியோனே! நின் திருப்பரங்குன்றத்தின்கண் உள்ள
சுனையருகே நின்ற மரங்களின் இளந்தளிர்களை