பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்298

    உதிர்த்த சுனையின் எடுத்த தலைய
 70 அலர்முகிழுற அவைகிடப்பத்
    தெரிமலர் நனையுறுவ
    ஐந்தலை அவிர்பொறி அரவ மூத்த
    மைந்தன் அருகொன்று மற்றிளம் பார்ப்பென
    ஆங்கிள மகளிர் மருளப் பாங்கர்
 75 பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்தவா யாம்பல்
    கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள்
    எருவை நறுத்தோ டெரியிணர் வேங்கை
    உருவமிகு தோன்றி ஊழிணர் நறவம்
    பருவமில் கோங்கம் பகைமல ரிலவம்
 80 நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க
    மணந்தவை போல வரைமலை யெல்லாம்
    நிறைந்தும் உறழ்ந்து நிமிர்ந்துந் தொடர்ந்தும்
    விடியல் வியல்வானம் போலப் பொலியும்
    நெடியாய்நின் குன்றின் மிசை;
 85 நின்யானைச் சென்னி நிறங்குங் குமத்தாற்
    புனையாப்பூ நீரூட்டிப் புனைகவரி சார்த்தாப்
    பொற்பவழப் பூங்காம்பிற் பொற்குடை யேற்றி
    மலிவுடை யுள்ளத்தான் வந்துசெய் வேள்வியுள்
    பன்மண மன்னும் பின்னிருங் கூந்தலர்
 90 கன்னிமை கனிந்த காலத் தார்நின்
    கொடியேற்று வாரணங் கொள்கவழ மிச்சில்
    மறுவற்ற மைந்தர்தோள் எய்தார் மணந்தார்
    முறுவற் றலையளி எய்தார்நின் குன்றம்
    குறுகிச் சிறப்புணாக் கால்;
 95 குறப்பிணாக் கொடியைக் கூடியோய் வாழ்த்துச்
    சிறப்புணாக் கேட்டி செவி;
    உடையும் ஒலியலுஞ் செய்யைமற் றாங்கே
    படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும்
    உருவும் உருவத்தீ ஒத்தி முகனும்
100 விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி
    எவ்வத் தொவ்வா மாமுதல் தடிந்து
    தெவ்வுக் குன்றத்துத் திருந்துவேல் அழுத்தி