எரிசினங் கொன்றோய்நின் புகழுரு வினகை
நகையச் சாக நல்லமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயமி லொருகை
35 இருகை மாஅல்
முக்கை முனிவ நாற்கை அண்ணல்
ஐங்கைம் மைந்த அறுகை நெடுவேள்
எழுகை யாள எண்கை ஏந்தல்
ஒன்பதிற்றுத் தடக்கை மன்பே ராள
40 பதிற்றுக்கை மதவலி நூற்றுக்கை யாற்றல்
ஆயிரம் விரித்தகைம் மாய மள்ள
பதினா யிரங்கை முதுமொழி முதல்வ
நூறா யிரங்கை ஆறறி கடவுள்
அனைத்து மல்லபல வடுக்க லாம்பல்
45 இனைத்தென எண்வரம் பறியா யாக்கையை
நின்னைப் புரைநினைப்பின் நீயல துணர்தியோ
முன்னை மரபின் முதுமொழி முதல்வ
நினக்குவிரிந் தகன்ற கேள்வி யனைத்தினும்
வலியினு மனத்தினு முணர்வினு மெல்லாம்
50 வனப்புவரம் பறியா மரபி னோயே
அணிநிழல் வயங்கொளி யீரெண் தீங்கதிர்ப்
பிறைவளர் நிறைமதி யுண்டி
அணிமணிப் பைம்பூண் அமரர்க்கு முதல்வனீ
திணிநிலங் கடந்தக்காற் றிரிந்தயர்ந் தகன்றோடி
55 நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ் பவிழ்தண்டார்
அன்னவர் படவல்லா அவணர்க்கு முதல்வனீ
அதனால், பகைவ ரிவரிவர் நட்டோ ரென்னும்
வகையு முண்டோநின் மரபறி வோர்க்கே
ஆயிர வணர்தலை அரவுவாய்க் கொண்ட
60 சேவ லூர்தியுஞ் செங்கண் மாஅல்
ஓவெனக் கிளக்குங் கால முதல்வனை
ஏஎஇன கிளத்தலின் இனைமைநற் கறிந்தனம்
தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றநீ
கல்லினுள் மணியுநீ சொல்லினுள் வாய்மைநீ
65 அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ
|
|
|
|