பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்300

குன்றத்திலே எழுந்தருளினாய்; மேலும் அவ் வானவர் மகளொருத்தியை
மணந்து அவர்க்கு மருமகன் ஆனாற்போல, இம் மண்ணவர்
மகளொருத்தியையும் மணந்து இவர்க்கும் மருமகனாய் இன்பம் நல்குதல்
வேண்டும் என்றும், அவ் வானவர் மகளொருத்தி நம் பக்கலிலே இருந்து
விழாக் கொள்ளுமாறு, இம் மண்ணவர் மகளொருத்தியும் நம் பக்கலிலே
இருந்து விழாக் கொள்க என்றும் கருதிப்போலும் நீ வள்ளியை மணம்
புணர்ந்தருளினாய் என்பது இப் பகுதியின் கருத்து. இக் கருத்தினை
உன்னுந்தோறும் உன்னுந்தோறும் மண்ணவராகிய நம் முள்ளத்தே
உவகை பொங்கி எழா நின்றதன்றோ?

      "நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து" எனக் கம்ப நாடரும்,
"நரர்களுக்கும் சுரர்களுக்கும் நடுநின்ற நடுவே" என இராமலிங்க
அடிகளாரும் கூறிய மொழிகளையும் நினைக.

      "இறைவனே விரும்பி உறைதற் கிடமாயின் அதன் பெருமை
அறியும் தரம் மாந்தர்க்குளதோ," என்பார் "புலவரையறியாத புகழ் பூத்த
கடம்பு" என்றார். புலவரை - அறிவுஎல்லை. முனிமரபு - தலைமைத்
தன்மை. ஆன்றவர் - தேவர். மன், ஆக்கப் பொருளில் வந்தது. நுகர்ச்சி
என்றது, இறைவன் திருவடி தொழுதலான் உண்டாகும் பேரின்பத்தை.

      நினைக்கு மளவிலே உள்ளங்குளிரும் இயல்புடைய பரங்குன்றம்
என்பார், 'நின் தண்பரங்குன்று' என்றார். இயலணி மயிற்கொடி வதுவை
எனக் கூட்டுக. வதுவை - திருமணம். வானவர்மகளை மணத்தற்கு மாறாக
மண்ணவர் மகளையும் மணத்தல் வேண்டும் என்னும் கருத்தாற் போலும்
மயிற்கொடி வதுவை நிகழ்த்தியது என்க.

      துறக்கத்தவள் என்றது, தேவசேனையை. மயிற்கொடி என்றது,
வள்ளியை. வள்ளியை மணம் புணர்ந்தமையானே மண்ணவர் முருகனை
உறவு கொண்டாடுதலையும் அவன்பால் உரிமையோடே வரங்
கேட்டலையும் ஆசிரியர் இளங்கோவடிகளார் இயற்றி அருளிய
சிலப்பதிகாரத்தே குன்றக்குரவை (பாட்டு மடை: 15- 6-7.) யின்கண்.

"கயிலைநன் மலையிறை மகனைநின் மதிநுதல்
மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயன்மண மொழிஅருள் அவர்மணம் எனவே"

மலைமகள் மகனைநின் மதிநுதன் மடவரல்
குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்நின் னடியிணை தொழுதேம்
பலரறி மணமவர் படுகுவர் எனவே"

"குறமகள் அவள்எம் குலமகள் அவளொடும்
அறுமுக ஒருவனின் அடியிணை தொழுதேம்