தாற் செய்யும் களப்போர் என்க.
எனவே, மதுரைமக்கள் அறிவு வன்மையும் உடல்
வன்மையும் ஒருங்கேயுடையர் என்பது கருத்து.
மதுரையின்கண் அறிவுடையோர் தாம் பிற நாட்டினரோடு சொற்போர் செய்து
வென்றமைக்கு அறிகுறியாக வெற்றிக்கொடி உயர்த்திருத்தலும் மறவர் தம் வெற்றிக்கு
அறிகுறியாக வெற்றிக்கொடி உயர்த்திருத்தலும் ஆகிய செயல்களை,
"வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
நீரொலித் தன்ன நிலவுவேற் றானையொடு
புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப்
புகழ்செய் தெடுத்த விறல்சால் நன்கொடி
. . . . . . . . . . . . . . . . . நன்பல
பல்வேறு குழூஉக் கொடி பதாகை நிலைஇ"
(367 - 73)
எனவரும் மதுரைக்காஞ்சியானும், இதனுள் நன்பல பல்வேறு
குழூஉக் கொடி
என்பதற்கு, " 'நன்பல' என்றார், கல்வி கொடை தவம் முதலியவற்றை" என, ஆசிரியர்
நச்சினார்க்கினியர் தரும் விளக்கத்தானும் உணர்க.
இராப்பொழுதும் எல்லையற்ற இன்பத்தோடு கழிதற்கிடமான
மதுரை யென்பார்
'கலப்போ டியைந்த இரவு' என்றார். கலப்பு - காதலர் கூட்டம். இரவுத் தீரெல்லை -
வைகறைப் பொழுதென்க.
அறஞ்செய்தோர் துறக்கம் எய்தி அதன்பயனை நுகர்வர்
என்பதும், தீவினை
செய்தோர் நரகமெய்தி வருந்துவர் என்பதும் மெய்ந்நூற்றுணிபு. இதனை,
"மேனிலை உலகத் தவருடன் போகும்
தாவா நல்லறஞ் செய்திலர்"
என்றும்,
"நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும்
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை"
(சிலப் - 30; 124-5; 136-40)
என்றும்,
"வண்புகழ் மன்னவன் விளங்கிய வொழுக்கத்தால்
நல்லாற்றின் உயிர்காத்து நடுக்கறத் தான்செய்த
தொல்வினைப் பயன்றுய்ப்பத் துறக்கம்வேட் டெழுந்தாற்போல்"
(கலி - 118; 1-3)
என்றும் பிறசான்றோரும் கூறுதலான் உணர்க.
|
|
|
|