"சீலமோ உலகம் போலத் தெரிப்பரி ததனால் நிற்கும்
கோலமும் அறிவா ரில்லை"
(சிவ. சித். சுப: 50)
எனவும்,
"பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்க ளல்லான்
அந்தமும் ஆதி யில்லான் அளப்பிலன் ஆத லாலே
எந்தைதான் இன்னன் என்றும் இன்னதுஆம் இன்னது ஆகி
வந்திடான் என்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்றம் இன்றே"
(சிவ.சித்.சுப: 64)
எனவும், மெய்கண்டவித்தகர் விளம்புதல் காண்க.
கடிநகர் - பூசனையுடைய திருக்கோயில். பாண்டியன் மனைவியரும்
அமைச்சரும் பிறமக்களும் தன்னைப் புடைசூழ நின் திருக்கோயிலை
வலம்வருதல், திங்கள் விண்மீன்சூழ மேருவை வலம்வருதலை ஒக்கும் என்க.
பாண்டியன் - திங்கள் மரபினன் என்பதுபற்றி அத் திங்களையே உவமையாக
எடுத்தமை உணர்க. திங்களுக்கு அசுவினி முதலிய மீன்கள் மனைவியர்
என்பவாகலானும், வியாழன் வெள்ளியாகிய மீன்கள் அமைச்சுத் தொழிலன
என்பவாகலானும், பிறவற்றானும் உவமையும் பொருளும் பொதுத்தன்மை
பெரிதும் சிறந்தனவாதல் உணர்க.
புலம் - அறிவு. வழுதி - பாண்டியன். மயிலோரும் என்புழி ஓரும்:
அசைச்சொல். காரியக்கண்ணவர் என்றது. அமைச்சரை. பாடு - பெருமை. மதி
- வரிசை. சுவல் - பிடரி, தானை, துகில்: பரிவட்டம். இஃது அரசனாற்
சிறப்புடைமை கருதி வழங்கப்படுவதோர் அடையாளப் பொருள் ஆகலின்,
அதனை விதந்தெடுத்தோதினர். எனவே, சிறப்புப்பட்டம் பெற்ற சான்றோரும்
தற்சூழ எனப் பெரியோர் கேண்மையுடைமை வழுதிக்கு ஓதியவாறாயிற்று.
மக்கள் எல்லாம் இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு மலையேறுதல் இன்றுங்
காணலாம். நாடும் நகரும் என்பன ஆகுபெயரான் அவற்றில் வாழும்
மக்களைக் குறித்தன.
(பரிமே.) 22.
"ஒற்றும் உரைசான்ற நூலு மிவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்"
(குறள் - 581)
என்பதனாற் கண்ணவரென்றார்.
24-7. பழைய வரிசையாற் சூடிச் சுவன்மிசை யசையும் பரி வட்டத்தினும்
ஏத்திய நாவினும் பரந்த உவகையினும் நாடும் நகரும் அடையவெனக் கூட்டுக.
30 - 37: தும்பி . . . . . . . . யாமேத்துமாறு
(இ-ள்.) (36 - 7) குருகு எறி வேலோய் - கிரௌஞ்ச மலையை உடைத்த
வேற்படையை ஏந்திய இறைவனே, நின் குன்றம்கீழ் நின்ற இடைநிலம் - நினது திருப்பரங்குன்றத்தின்
|
|
|
|