பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்31

   வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ
   வெஞ்சுடர் ஒளியுநீ திங்களுள் அளியுநீ
   அனைத்துநீ அனைத்தினுட் பொருளுநீ ஆதலின்
   உறைவு முறைவது மிலையே யுண்மையும்
70 மறவியில் சிறப்பின் மாயமா ரனையை
   முதன்முறை யிடைமுறை கடைமுறை தொழிலிற்
   பிறவாப் பிறப்பிலே பிறப்பித்தோ ரிலையே
   பறவாப் பூவைப் பூவி னோயே
   அருள்குடையாக அறங்கோ லாக
75 இருநிழல் படாமை மூவே ழுலகமும்
   ஒருநிழ லாக்கிய ஏமத்தை மாதோ
   பாழெனக் காலெனப் பாகென ஒன்றென
   இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
   ஆறென ஏழென எட்டெனத் தொண்டென
80 நால்வகை ஊழியென் நவிற்றுஞ் சிறப்பினை
   செங்கட் காரி கருங்கண் வெள்ளை
   பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்
   இடவல குடவல கோவல காவல
   காணா மரப நீயா நினைவ
85 மாயா மன்ன உலகாள் மன்னவ
   தொல்லியற் புலவ நல்லியாழ்ப் பாண
   மாலைச் செல்வ தோலாக் கோட்ட
   பொலம்புரி யாடை வலம்புரி வண்ண
   பருதி வலவ பொருதிறன் மல்ல
95 திருவின் கணவ பெருவிறன் மள்ள
   மாநில மியலா முதன்முறை அமயத்து
   நாம வெள்ள நடுவண் தோன்றிய
   வாய்மொழி மகனொடு மலர்ந்த
   தாமரைப் பொகுட்டுநின் னேமி நிழலே.
கடவுள் வாழ்த்து
கடுவனிள வெயினனார் பாட்டு; பெட்டனாகனார் இசை;
பண்ணுப் பாலை யாழ்.