27 - 32: அப்போது கோதைகளும், தார்களும் சூட்டும்,
கண்ணியும், வலையமும் ஆகிய இவற்றால் அணிசெய்து கொண்ட
கூட்டத்தினர் வையைக் கரைக்கண் வந்து குழுமினர். சிலர், பிறர்
அணிந்துள்ள அணிகலன்களைப் பார்த்துக்கொண்டே வந்தனர்.
33 - 43: ஒரு தலைவியுடன் வந்த தோழியர், தலைவன்
தலைவியோடே இருப்பவும் தலைவியினிடத்திலிருந்து காணாமற்
போயினவாகக் கருதப்பட்ட வளையலையும் ஆரத்தையும் கூட்டத்திலே
வந்ததொரு பரத்தை அணிந்திருத்தலைக் கண்டார்; அதனால் இப்
பரத்தை நந்தலைவியின் மாற்றாள் போலும் என்று கருதி அத்தோழியர்
அவளை உற்று நோக்கினர்; அஃதறிந்த தலைவன் நாணினன்;
அத் தோழியர் நந்தலைவியினுடைய அணிகலனைக் களவாடி
இப் பரத்தைக்குக் கொடுத்த கள்வனுடைய முகத்தைப் பாருங்கள்
என்றனர்; அது கேட்ட பரத்தை தன் ஆயத்துட் புகுந்து மறைந்து
கொண்டாள்; அத் தோழியர் அப்பரத்தையைத் தொடர்ந்து
மணற்பரப்பிலே கண்டனர்.
44 - 65: அதுகண்ட பரத்தை "நீயிர் என்னை ஏன்
தொடர்கின்றீர்?" என்று சினந்து எதிர்த்தாள்; தலைவி திகைத்து ஒன்றும்
சொல்லாமல் நின்றாள்; தோழியர் அப் பரத்தையை நோக்கிக் காமத்தைப்
பொய்யொடு கலந்து விற்கும் கணிகையே! பொதுமகளே! காமுகப்
பன்றிகள் நுகரும் தொட்டியே! வனப்பாகிய வயலிலே கள்ளாகிய
நீரைவிட்டுக் காமமாகிய கலப்பையாலே எம்முடைய எருது சோம்பிக்
கிடவாமல் உழுகின்ற பழைய சாலே! பொருள் வழங்குவோரைக்
கண்ணாகிய கயிற்றாலே தோளாகிய தறியில் கட்டி காமவின்பம்
மிகும் பொருட்டு இசையினையும், எம்பாற் களவுகொண்ட அணிகளை
அணிந்து கொண்ட அவ்வழகையும், ஊட்டாநின்ற பொதுமகளே! ,
முன்னர்க் கெட்டுப்போன எம் எருதினைத் தேடிக் கண்டுபிடித்து
வணக்கி இவ்வையையாகிய தொழுவத்திற் புகவிட்டு அடித்து இடித்து
இவ் வழக்குரைக்கும் அவையத்தார்க்கு அஃது எம்மெருதாதலை
அறிவிக்க நின்னைத் தொடர்ந்தேம்; வேளாளர்க்குத் தம் எருதைத்
தொழில் செய்யாது ஓடவிடுதல் முறைமையன்றோ? எம் தலைவியின்
ஆரத்தை நீ அணிதற்கு அவள் மார்பும் நின் மார்பும் ஒரு
தன்மையுடையன ஆய்விட்டனவோ! என்று வைவாராயினர்.
66 - 73: அப் பரத்தை, தலைவியைச் சில சொல்லி
ஏசினாள்;
அதுகேட்ட முதுமகளிர் வெறுத்து அப்பரத்தையை |
|
|
|