புனையவும் - மகளிர் சூடிக்கொள்ளும்
மரபினவாகிய மாலையை
ஆராயாமல் ஆடவர் அணிந்து கொள்ளாநிற்பவும், மைந்தர் தண் தார்
மகளிர் பெய்யவும் - அங்ஙனமே ஆடவர் அணியு மரபினவாகிய
மாலையை ஆராயாமல் மகளிர் சூடிக்கொள்ளா நிற்பவும், முந்துறல்
விருப்பொடு முறை மறந்து அணிந்தவர் - இவ்வாறாகப் புதுப்புனல்
வருகை காணுதற்குத் தாம் தாம் முந்துதல் வேண்டும் என்னும்
ஆசையாலே ஊரு மரபும் மறந்து அணியு மரபும் மறந்து மாறாக
ஊர்ந்தவரும் அணிந்தவருமாகிய மாந்தர் எல்லாம்;
(வி - ம்.) தடம் பொழில் தன்நாற்றம் மீது யாற்று
வெம் நாற்று
வேசனை நாற்றம் குதுகுதுப்ப ஊர்ஊர் என இயைத்துக் கொள்க. பொழில்
- ஈண்டு வையையின் இருகரையிடத்தும் உள்ள சோலைகள்.
சோலையினின்றும் வரும் மணத்தினுங் காட்டில் யாற்றின்கண் புதுநீர்
புகுந்துழி அம் மணல் வெப்பத்தானே தோற்றுதலையுடைய நாற்றத்தை
நுகர்ந்து பெரிதும் குதூகலிப்பனவாகிய ஊர்கள் என்க. வேசனை -
புகுதல்; புதிதாக வந்து புகுந்து பரவுதலையுடைய நாற்றம் என்க. ஈண்டு
யாற்றின் வெம்மையால் தோற்றுதலையுடைய நாற்றம் எனவே வெங்கார்
நாற்றம் என்பது பெற்றாம் குதுகுதுப்ப: பலவறி சொல். குதுகுதுத்தல்;
பெரிதும் மகிழ்தல். புதுப் புனல் வருகையை மக்கட்கு உணர்த்தும்
பொருட்டு முழக்கும் பறை முழங்கிற்று என்க. ஒலிகொண்டன்று -
ஒலித்தது.
இனி (15) மதுரையிலுள்ள மாந்தர் செயல் கூறுகின்றார்.
கூடலின்
உயர் மதில் என்க. சுருங்கை - குழாய். வையை நீர் பெருகி மதுரை
மதிலிடத்துள்ள கருங்கையின் வழியாகப் பாயும் ஒலியினாலே அம்
மதுரை மக்கள் துயிலுணர்ந்து எழுந்தனர் என்க.
உணர்பு - உணர்ந்து. எழீஇ - எழுந்து. திண்டேர் பூட்டவும்
என்பது தொடங்கிப் பெய்யவும் என்னுந் துணையும் புதுநீர் வருகையை
உணர்ந்த மதுரை மக்களின் மகிழ்ச்சியாலே உண்டான மருட்கைச்
செயல்களை (21) நகைச்சுவைபட ஓதுகின்றார்.
ஆக்கமாதல், இழப்பாதல், ஞெரேலென மனிதர்க்கு உண்டாகும்
பொழுது அவர் மனம் முழுவதையும் அவ்வாக்கம் அல்லது இழப்பே
கவர்ந்து கொள்ளாநிற்கும்; ஆதலால் அப்பொழுது அவர் செய்யும்
செயலெல்லாம் முறையற்றதாகவே காணப்படுதல் இயல்பு. ஆகலின்
வையைக்கண் நீர் வந்தது என்றதனை உணர்ந்தவுடன் பெரிதும் மகிழ்ந்து
தாம் தாம் முந்துற வேண்டும் ஆசையானே இங்ஙனம் தடுமாறினர் என்க.
தேரை ஊரக் கருதிக் குதிரைகளை வங்கவண்டியிற் பூட்டி
அதனை ஊர்வர்; வங்கவண்டியிற் பூட்டற்குரிய எருதுகளைத் தேரிற்
பூட்டிச் செலுத்துவர்; யானை குதிரைகளைப் பண்ணுறுத்தாமல் வறிதே
செலுத்துவர்; யானைக்குரிய ஒப்பனையைக் குதிரைக்குச் செய்வர்; ஆடவர்
மாலையை மகளிர் புனைவர்; மகளிர் மாலையை ஆடவர் புனைவர்;
குதிரைக்குச் செய்யும் ஒப்பனையை யானைக்குச் செய்வர்; இங்ஙனமாக
முறை மறந்தோராகிய மக்கள் எல்லாம் என்க. இதனோடு, |
|
|
|