27 - 36: புகைவகை . . . . . . . காண்மின்
(இ - ள்.) பூங்கோதை புகை வகை தைஇயினார் நல்லார் - பூமாலைகளை
மேலும் மணமுடைத்தாக்குதல் கருதி நறுமணப் புகை சூழ்வித்த
வகையாலே அணிந்த மகளிரும், தார் தகை வகை தைஇயினார் -
பூமாலைகளை அணிந்துகொள்ளும் தொழிலானும் அழகு மிகும்
வகையாலே அணிந்துகொண்ட மைந்தரும், வகை வகை மாலை
தையினார் - நிறத்தானும் மணத்தானும் கட்டுதற் றொழிலானும் பல்வேறு
வகைப்பட்ட மாலைகளை அணிந்தவரும். சூட்டுங் கண்ணியும் மோட்டு
வலையமும் இயல் அணி அணி மிக மிக - உச்சிச் சூட்டும் கண்ணியும்
பெரிய வளையமுமாய் இயன்ற அணிகளையுடையோருமாகிய திரள்வந்து
மேலும் மேலும் மிகுந்தொறும், அமர் பரப்பின் ஏறி நிற்ப -
விரும்புதற்குக் காரணமான கரைப் பரப்பில் ஏறிநிற்ப, அயல் அயல்
அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர் - அங்ஙனம் நின்றோருட் சிலர்
பிறர் பிறர் அணிந்துள்ள ஆடை அணிகலன்களைப் பார்க்கும் பொருட்டு
அவ்வவ் விடங்களிலே சுற்றி வருபவர்களுள், இடுவளை ஆரமோடு
ஈத்தான் உடனாக - ஒரு தலைவன் தலைவிக்குரிய பூணும்
வளையலையும் முத்து மாலையையும் ஒரு பரத்தைக்கு அத்தலைவி
யறியாமல் கொடுத்திருந்தானாக அத் தலைவியோடும் அத் தலைவனும்
இருக்கும் பொழுதே, கெடுவளை பூண்டவள் மேனியிற் கண்டு -
அத்தலைமக்களோடு வந்த தோழியர் காணாமற்போனதாகக் கருதப்பட்ட
தம் தலைவியின் வளையலை அப் பரத்தையிடத்தே கண்டு, நொந்தவள்
மாற்றாள் இவள் என நோக்க - இவ் வளையலை இழந்து வருந்திய
நந்தலைவியின் மாற்றாள் போலும் இவள் என்று அப் பரத்தையைச்
சுட்டித் தம்முள் உரையாடி அவளைக் கூர்ந்து நோக்காநிற்ப, (அதுகண்ட
தலைவன் நாணினானாக,) தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின் -
அது கண்ட தோழியர் மீண்டும் தம்முள் இதோ இவ் வணிகலன்களைக்
களவு செய்து இவட்குக் கொடுத்த கள்வனுடைய ஒளி மழுங்கிய
முகத்தையும் காணுங்கள், இவை நம்முடைய தலைவியின்
அணிகலன்களே, ஐயமில்லை என்றார்.
(வி - ம்.) நல்லார் - கோதைகளை நறுமணப் புகையினால் மேலும் மண
மூட்டித் தைஇயினார் என்க. தைஇயினார் - அணிந்தார். தார் என்ற
குறிப்பாலே மைந்தர் தகைவகை தைஇயினார் என்பது பெற்றாம்.
தகைவகை தையுதல் - அணியும் வகையானும் அழகுற அணிதல். சூட்டு
கண்ணி வலையம் என்பனவும் மலர்மாலை வகைகளே என்க. மோட்டு
வலையம் - பரிய மாலையானாகிய வளையம் என்க. இயலணி
- அணி இயன்ற அணிகளையுடைய கூட்டம்; ஆகுபெயர்.
அமர் பரப்பு - தங்குதற்குரிய கரைப்பரப்புமாம். மாற்றாள்
- தன் கணவ |
|
|
|