பக்கம் எண் :

பரிபாடல்- வையை 328

னுடைய மற்றொரு காதலி. நொந்தவள் - அவ் வணிகலன் களவு போயின
என்று வருந்திய தலைவி என்க. கமழ்ப்பு - நாணம்; சமழ்ப்பு முகம்
என்றது நாணத்தால் ஒளிமழுங்கிய முகம் என்றவாறு. "தந்த கள்வன்
சமழ்ப்பு முகம் காண்மின்" எனத் தோழியர் தம்முள் உரையாடிய
அளவில் அஃதறிந்த பரத்தை பக்கத்தே நின்ற மகளிர் குழுவினுடே
மறைந்துகொள்ளக் கருதி விரைந்தாளாக அங்ஙனம் விரைவாளை
நோக்கிய தோழியர் "உண்கணார் நிறை காடாக ஓடி யொளித்து ஒய்யப்
போவாளைக் காண்மின்" என ஏனையோர்க்குக் கூறினராகக் கருதுக.

      இடுவளை: வினைத்தொகை. ஆரம் - முத்துமாலை. ஈத்தான் -
ஈண்டுத் தலைவன். கெடுவளை - காணாமற்போன வளையல். மேனி -
கைக்கு ஆகுபெயர்.

      (பரிமே.) பூங்கோதைகளைப் புகைத்த வகையால் அணிந்தாரும்
தாரைத் தகைந்த வகையால் அணிந்தாரும் சூட்டும் கண்ணியும்
வலையமுமாகிய இவற்றான் மிக மிக இயன்ற அணிகளையுடைய திரளும்.

      35. நொந்தவள் - அதற்கு நொந்து அவளுக்கு.

37 - 39: செரு. . . . . . . காண்மின்

      (இ-ள்.) சீற்றத்தவை செருச்செய்த வாளி அன்னநேர் இதழ் உண்
கண்ணார் நிறைகாடு ஆக - அங்ஙனம் தலைவனிலை பற்றித் தோழியர்
உரையாடி நிற்கும்பொழுதே அஃதறிந்த அப்பரத்தை சினமுடையனவாய்ப்
போர்செய்து பகைவர் குருதி தோய்ந்த அம்புகளை ஒத்த நேரிய
இமைகளையுடைய மையுண்ட கண்களையுடைய மகளிரது கூட்டமே தான்
மறைதற்குரிய காடாகக்கொண்டு, ஓடி ஒளித்து ஒய்யப் போவாள் -
அத் தோழியர் தன்னைக் காணாமல் அவர்பால் நின்று ஓடி ஒளித்துத்
தப்பப்போகின்றவளை அத் தோழியரிற் கண்டோர் ஏனையோர்க்குக்
காட்டி, நிலைகாண்மின் என - அப் பரத்தையின் நிலைமையையும்
காண்மின் அவ் வளையல் நந் தலைவியுடையதே என்பதனை இதனானும்
காண்மின் என்று கூறாநிற்ப;

      (வி - ம்.) அவ் வணிகலன் நந் தலைவியுடையதே என்னுமளவில்
தலைவன் நாணினமையும் இதுபற்றி உரையாடுமளவில் கூட்டத்துள்
அப் பரத்தை ஓடி ஒளிதலும் ஆகிய இவ்விரண்டு ஏதுக்களானும் அவை
நம்முடையன என்பது உறுதியே என்பார். 'கள்வன் முகம் காண்மின்;
ஒய்யப் போவாளைக் காண்மின்' என்றும், தோழியர் தம்முள் உரையாடா
நின்றனர் என்க. சீற்றத்தவை செருச் செய்வாளி என மாறுக. சீற்றத்தவை
- சினமுடையன. 'கள்வர் தம்மை உடையார் காணாதபடி காட்டினுள்
புகுந்து மறைதல்பற்றி அம் மகளிர் திரளே காடாக' என்றார். ஒய்ய -
தப்புதற்கு.

      (பரிமே.) 40. என - எனத் தம்முட் காட்டி.