அதனைக் கொள்ளவரும் காமுகரை
மயக்கும் விலைத்தொழிலையுடைய
கணிகையே!. பெண்மைப் பொதுமை பிணை இலி - நினது
பெண்மையின்பம் பலர்க்கும் பொதுமை உடையதாதல் பற்றி ஒருவரானும்
பேணப்படுதல் இல்லாதவளே, ஐம்புலத்தைத் துற்றுவ துற்றும் துணையிதழ்
வாய்த்தொட்டி - ஐம்பொறிகளானும் நுகரப்படும் ஐந்து புலத்தைமட்டுமே
நுகரும் இயல்புடையனவாகிய காமுகப் பன்றிகள் நுகர்தற்குரிய இரண்டு
உதடுகளையுடைத்தாகிய தொட்டிபோல்வாளே, காரிகை நீர் ஏர் வயல்
- காரிகை நீர்மையினையுடைய வனப்பாகிய வயலிலே, முற்றா நறுநறா
மொய்புனல் அட்டி - முதிராத நறிய கள்ளாகிய வலிய நீரைப்பாய்ச்சி,
காமக்களி நாஞ்சில் காம வெறியாகிய கலப்பையைக் கட்டி, மூரி தவிர
முடுக்கும் முதுசாடி எம்முடைய எருது சோம்பிக் கிடவாமல் உழுகின்ற
பழைய படைச்சாலே;
(வி-ம்.) அமர்காமம் - விரும்பப்படும் காமவின்பம்.
மாயப்பொய்:
பண்புத்தொகை. "மாயப்பொய்பல கூட்டும் மாயத்தாள்" (சிலப். கானல்.
கட்டுரை) என்றான் கோவலனும். மயக்கும், அதனைக் கொள்ள வரும்
காமுகரை மயக்கும் என்க. தன்னின்பத்தை விலைப்பொருட்டால் விற்கும்
கணிகையே! பெண்மை, ஈண்டுப் பெண்மையின்பம். பொதுமை -
யாவர்க்கும் பொதுவாந்தன்மை. பிணை - பிணைப்புடையோர்:
ஆகுபெயர். தன்னோடு தொடர்புடைய காதலரை இல்லாதவளே
என்றவாறு.
ஐம்புலம் - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன.
"கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் இவ் வைம்புல னுகர்ச்சி
யொன்றே கருதிவந்து காமுகப் பன்றிகள் நுகர்தற்குரிய தொட்டியே என்க.
எனவே விலங்குகட்கும் மக்களுக்கும் பொதுவாகிய புலனுகர்ச்சி
மாத்திரையே ஆகிய காமவின்பம் அன்றிக் காதலின்பம் அறியாத
காமுகர் எனப் பரத்தமையுடையோரை இகழ்ந்தவாறாயிற்று. இவ்வாற்றால்
மாயமேயன்றி அன்பில்லாதவளே எனப் பரத்தையை இகழ்ந்தாளுமாயிற்று.
துற்றுவ - உண்பன: பலவறி சொல். தொட்டி என்னும் குறிப்பானே
பன்றிகள் எனப்பட்டது. "பன்றிக் கூழ்ப் பத்தர்" என்றார் நாலடியினும்.
தொட்டிக்கும் உதடுண்மையால் 'இணையிதழ்த்தொட்டி' என்றாள். தொட்டி
என்றது இடக்கரடக்கு. புனலட்டி - நீர்பாய்ச்சி. காரிகை, ஏர், என்பன
அழகின் கூறுபாடுகள். களி - வெறி. நாஞ்சில் - கலப்பை. மூரி -
சோம்பல். சாடி - சால்: உழுபடைச்சால். எம்மெருது என்பது அவாய்
நிலையான் வருவித்துக் கூறப்பட்டது. முதுசாடி - பழைய படைச்சால்.
(பரிமே.) 'பலகால் உழப்படுதலின் முதுசாடி' என்றார்.
சால்
என்னும் பெயருடைமையாற் சாடி எனப்பட்டது.
55 - 58: மடமதர் . . . . . . . .பொதுவி
(இ - ள்.) மடம் மதர் உண்கண் கயிறு ஆக வைத்து
-
மடப்பமுடைய மதர்த்த மையுண்ட கண்ணையே கயிறாகக்கொண்டு, |
|
|
|