பக்கம் எண் :

பரிபாடல்- வையை 332

புற அழகையும் ஆர்த்தும் என்க. துறை என்றது வையையின்கண் உள்ள
நீராடுந் துறையை என்க. இத்துறை பலர்க்கும் நீராடலின்பத்தை வரையாது
அளிக்குமாறு நீயும் காமவின்பம் வழங்கும் பொதுமகள் என்றவாறு.
பொதுவி - பொதுவாக உள்ளாய்.       (பரிமே.) ஆர்த்தும் பொதுவி
என்க. 58 - 63: கெட்டதை . . . . . . . .படர்ந்தியாம்      

(இ - ள்.) கெட்டதை - ஏடி முன்னே கெட்ட எம்முடைய எருதினை
யாம் தேடித்திரிந்து கண்டு பிடித்து, பொய்தல் மகளிர் கண் காண,
இகுத்தந்து - இவ்விளையாட்டு மகளிருடைய கண்கள் காணும்படியாக
அதனை வணக்கிக் கொணர்ந்து, இவ்வையைத் தொழுவத்துத் தந்து -
இவ் வையையாகிய கொட்டிலிலே புகுத விட்டு, அடித்து இடித்து -
நன்றாக அடித்து உரப்பி, மாலை மத்திகையா மோதி - மாலையையே
சம்மட்டியாகக் கொண்டு புடைத்து, அவையத்து - இவ்வழக்கினை
உரைத்தற்குரிய அறவோர் அவையத்திலுள்ளோர் எல்லாம் அஃது
எம்முடைய எருதாதல் அறியும்படி செய்ய, யாம் படர்ந்து தொடர்ந்தேம்
- யாம் நின் பின்வந்து நின்னைத் தொடரா நின்றேம், வேளாளர்க்கு
எருது தொழில் செய்யாது ஓடவிடும் கடன் இன்று - வேளாளர்க்குத்
தம் எருதைத் தொழில் செய்யாமல் பிறர்பால் சென்று தொழில்
செய்யும்படி ஓட விடுவது முறைமை இன்றாகலான்.

      (வி - ம்.) என்னை தீயிர் தொடர்தற்குக் காரணம் யாதென
வினவிய பரத்தைக்குக் காரணம் கூறுவாள், கணிகையே! பிணையிலி!
தொட்டியே! முதுசாடியே! கெட்ட எம் மெருதைக் கண்டு வணக்கி,
அடித்து உரப்பி, மோதி, அவையத்தார் அறியச் செய்யும்படி நின்னைத்
தொடர்ந்தேம் காண் என்று விடையிறுத்தபடியாம்.

      கெட்டதை - கெட்டுப்போன எம்முடைய எருதை என்க.
பொய்தல் மகளிர் - விளையாட்டு மகளிர். இகுத்தல் - தாழச்செய்தல்.
தொழுவம் - ஈண்டுப் பட்டிமாடடைக்கும் கொட்டில் என்றவாறு. இடித்து
- உரப்பி; அதட்டி. மத்திகை - சம்மட்டி. அவையத்தார் அறியும்படி
தொடர்ந்தேம் என்க. தலைவனை எருதென்றவள் தம்மை வேளாளர்
என்றமை சாலப் பொருந்துமாறறிக.

      (பரிமே.) 61. அவையத்து - இவ் வழக்குரைக்கும் அவையத்திலே
எம் எருதாதல் யாரும் அறிய.

      13. கடன் - முறைமை.

64 - 70: தன்மார்பம் . . . . . . . . .வாரென


      (இ - ள்.) தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள்மார்பும் -
தனக்கு உரிய தலைவன் மார்பினை நினக்குத் தண்டமாகத் தரும்