முத்துமாலையை உடைய எந்தலைவியின்
மார்பும், நின் மார்பும் - அம்
முத்துமாலையைக் களவு கொண்டணிந்துள்ள பொது மகளாகிய
நின்னுடைய மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல் - தம்முள் ஒரு
தன்மையவாக ஒத்த நீர்மையினை உடையனவாய் விட்டனவோ,
என்னாமுன் - என்று வைது சொல்லுமுன்னரே, தேடினாள் ஏச -
தேடப்பட்ட அப் பரத்தை அத்தோழியின் வசை பொறாளாய் மேலும்
எதிர்ப்பாளாய்த் தலைமகளைக் குறித்துச் சில வசைகளைக் கூறாநிற்ப,
வையை அகத்துச் சில மகளிர் அதற்கு ஊடினார் - அப்பொழுது
வையையின்கண் அது கேட்டு நின்ற முதுமகளிருட் சிலர் பரத்தையை
வெறுத்தாராய், சிந்திக்கத் தீரும் பிணியாள் செறேற்க - அப் பரத்தையை
நோக்கி ஏடி கற்புடைமையால் நினைக்கும் அளவிலே பாவம் நீங்கும்
தன்மையுடைய அக் குலமகளை இவ்வாறு சினவாதே கொள், வெஞ்சொல்
மைந்துஉற்றாய் - நீ கொடுமைமொழி கூறிப் பேதைமை உடையை
ஆயினாய், மடமயில் சாயலை வந்திக்க வார் என - இப் பாவந்
தீர்தற்பொருட்டு மடப்பமுடைய மயில் போலும் மென்மையுடைய
அத் தலைவியை வணங்க வருவாயாக என்று சொல்ல;
(இ-ள்.) தன் மார்பு - தனக்கே உரிமையுடைத்தாகிய தலைவன் மார்பு.
தலைவன் மார்பு தலைவிக்கு உரிமையுடையதென்பதனை. "நாடன் மார்பு
உரித்தாகிய மறுவில் நட்பே" (244) எனவரும் குறுந்தொகையானும்
உணர்க. தண்டம் தருதல் என்பது வீணாகக் கொடுத்தல் என்னும்
பொருளிற் கூறப்படுவதோர் உலகவழக்கு. அவ்வழக்கு இக் காலத்தாரும்
வழங்குதல் காணலாம்.
ஆரத்தாள் என்றது அவ்வாரத்தினை நீ களவு கொண்டனை என்னும்
நினைவிற்று. ஓர் ஒத்த - ஒரு தன்மையாக ஒத்த. நீர்மைய - தன்மைய.
கொல்: வினாவின்கண் வந்தது.
தேடினாள், தேடப்பட்ட பரத்தை என்க. அதற்கு - அங்ஙனம் ஏசுதற்குப்
பரிந்து என்க. செறேற்க - சினவாதே கொள். சிந்திக்கத் தீரும் பிணியாள்
என்றது, தன்னை நினைத்தவருடைய பாவத்தைத் தீர்க்கும் தெய்வக்
கற்புடைய குலமகளை என்றவாறு. பத்தினிப் பெண்டிர்
தெய்வத்தன்மையுடையர் என்பதனை,
"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"
(குறள் - 55)
எனவரும் திருவள்ளுவனார் பொய்யாமொழியானும்,
"இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
|