பக்கம் எண் :

பரிபாடல்- வையை 334

நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடென்னும்
அத்தகு நல்லுரை அறியா யோநீ"
(15: 142-8)

எனவரும் சிலப்பதிகாரத்தானும் உணர்க.

      சிந்திக்கத் தீரும் பிணியாள் என அத் தலைவியின்
தெய்வத்தன்மை குறித்து அத்தகையாளை வசை கூறித் தீவினை
செய்தாய்; அத் தீவினைக்குக் கழுவாயும் அவளை வந்தித்தலே
ஆதலால் அப் பத்தினித் தெய்வத்தை "வந்திக்க வார்" என்றார் என்க.
வார் - வருதி. "வார் அடா உனக்கு யாதுதானர் தம் மகள் அடுக்குமோ"
(வேத்திரகீ - 12) எனவரும் வில்லிபாரதத்தானும் அஃதப்
பொருட்டாதலறிக: முன்னிலை ஒருமை.

      ஆண்டுக் கூடிய மகளிரும் குலமகளிராதலின், அப் பரத்தை
தீவினை செய்தற்கிரங்கி அவள் தீவினை தீர்தற்குமோருபாயம்
கூறுவதனை நினைக்குங்கால் தன்பாற் பிழை செய்து சாபமேற்ற
வம்பப்பரத்தைக்கும் வறுமொழியாளனுக்கும் இரங்கி "நெறியினீங்கியோர்
நீரல கூறினும், அறியாமை என்று அறிதல் வேண்டும்" என்ற
கண்ணகியார் அருள் மொழியும் நினைவில் எழுகின்றது.
(சிலப். 10: 237-8)

      (பரிமே.) 66. தேடப்பட்ட அப்பரத்தை ஏன்ற கொண்டு
அத் தலைவியைச் சில வெய்யவாகச் சொல்ல.

69. மைந்து - அறியாமை.

70. வாரெனச் சொல்ல.
மேல் பரத்தை.

70 - 73: மனத்தக்க . . . . .. . . . . வரவு

      (இ - ள்.) இது மனத்தக்க நோய் - அம்மகளிர் அங்ஙனம்
தலைவியை வணங்குக என்றமை கேட்ட அப் பரத்தை இது என்றும்
நிலைபெறுவதொரு துன்பாக முடிந்தது எனத் தன்னுள்ளே
சொல்லிக்கொண்டு பின்னர் அம் முதுமகளிருள் ஒருத்தியை நோக்கி,
அன்னை வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு - அன்னையே
பகைவரைப் பகைவர் வணங்குதல் இழிந்த செயலாகும், புரையோய்
போற்றாய்காண் - உயர்ந்தோய் நினது உயர்வுடைமையானே
அவ் விளிவரவினை நீ அறிந்திலை காண், மாற்றாளை மாற்றாள் வரவு
புரையின்று - அங்ஙனமே மாற்றாளை மாற்றாள் வழிபடுதலும்
பெருமையில்லாததொரு செயலே ஆகும் என்று சொல்ல;

      (வி-ம்.) மன்னத்தக்க எனற்பாலது மனத்தக்க என, னகரமெய்
கெட்டு நின்றது. மன்னத் தக்க நோய் என்றது, மாற்றாளை வணங்குஞ்
செயலை அச் செயல் என் செய்தேம் என் செய்தேம் என நெடுங்க
காலம் நினைந்து நினைந்து வருந்துதற்குக் காரணமாய் நினைவிலே