பரத்தையர் இயற்கையாகிய காமவின்பத்தோடே,
ஆடலும் பாடலுமாகிய
கலையின்பத்தையும் அளாவி நுகர்வித்த லுடையராதலும் குல மகளிர்பால்
அஃதின்மையும் பற்றிப் பரத்தையரைச் சேக்கையினியார் என்றார் என்பது.
இனிப் பரத்தையர் தங் காதலரைப் பெரிதும் மகிழ்விக்கும் இயல்புடையர்
என்பதனைக் கோவலன் அனுபவ அறிவானே,
"திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்
குவளையும் குமிழுங் கொவ்வையுங் கொண்ட
மாதர்வாண் முகத்து மதைஇய நோக்கமொடு
காதலிற் றோன்றிய கண்கூடு வரியும்
புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்
கயலுலாய்த் திரிதருங் காமர் செவ்வியிற்
பாகுபொதி பவளந் திறந்து நிலாவுதவிய
நாகிள முத்தி னகைநலங் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்
அந்தி மாலை வந்ததற் கிரங்கிச்
சிந்தைநோய் கூருமென் சிறுமை நோக்கிக்
கிளிபுரை கிளவியும் மடவன நடையும்
களிமயிற் சாயலுங் கரந்தன ளாகிச்
செருவே னெடுங்கட் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி யாடலும்
சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும்
கலம்பெறா நுகப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவே றாயவென் சிறுமை நோக்கியும்
புறத்துநின் றாடிய புன்புற வரியும்
கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும்
மின்னிடை வருத்த நன்னுதல் தோன்றிச்
சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி யுய்ப்பப்
புணர்ச்சியுட் பொதிந்த கலாந்தரு கிளவியின்
இருபுற மொழிப்பொருள் கேட்டன ளாகித்
தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல்
கிளர்ந்துவே றாகிய கிளர்வரிக் கோலமும்
பிரிந்துறை காலத்துப் பரிந்தன ளாகி
என்னுறு கிளைகட்குத் தன்னுறு துயரம்
தேர்ந்துதேர்ந் துரைத்த தேர்ச்சிவரி யன்றியும்
வண்டலர் கோதை மாலையுண் மயங்கிக்
கண்டவர்க் குரைத்த காட்சி வரியும்
அடுத்தடுத் தவர்முன் மயங்கிய மயக்கம்
|
|
|
|