இருபத்தொன்றாம் பாடல்
-------------
செவ்வேள்
பொருட்சுருக்கம்
(17) வெற்றிக்கொடி யுயர்த்திய செல்வனே!
1 - 2: நீ ஊர்தியாகக்கொண்டு எழுந்தருள்வது தீப்போன்று
விளங்கும் முகபடாத்தையும், போர் வென்றியாலுண்டாய புகழினையும்
உடைய பிணிமுகம் என்னும் களிற்றியானையாம்.
3 - 7: நினது தாமரைபோன்ற திருவடிகளிலே அணிந்தது,
தைத்தல் அமைந்த பீலிப்போழால் ஒப்பனை செய்யப்பட்ட அடையற்
செருப்பு
8 - 9: நீ நினது கையிலே ஏந்தியது, சூரபன்மாவினைத்
தடிந்து,
கிரௌஞ்சமலையைத் துளைத்த வேற்படை.
10 - 11: பெருமானே நீ அணிந்த மாலை, வள்ளிப்பூவை
விரவித்தொடுத்த கடப்ப மலர்மாலை.
12 - 15: நீ எழுந்தருளி வீற்றிருக்கும் திருப்பதி,
உயர்ந்தோர்
தம் செந்நாவானே புகழப்பட்ட ஏழிலைப்பாலை மரமடர்ந்ததும் அருவி
இடையறா தொழுகுவதும் வானைத் தீண்ட வளர்ந்ததுமாகிய
திருப்பரங்குன்றம்.
16 - 17: அடியேங்கள் அத் திருப்பரங்குன்றத்தடியிலே
உறைந்து
வாழும் பேறு அருள்க! என்று நின் திருவடியைத் தொழுது வேண்டா
நின்றேம்; எமக்கு அப் பேற்றினை அருளுக!
18 - 29: பெருமானே! நினது பரங்குன்றத்தின்கண்
ஆடல்
மகளொருத்தி, தன் காற்சிலம்பு ஒலிக்கத் துடியோசைக்கியைய
அடிபெயர்த்துத் தோளசைத்துக் கள்வெறி தடுப்பவும் கூத்தாடாநின்றாள்;
அவள் அழகு காரணமாக ஒருதலைவி தன் கணவனோடு ஊடினாள்;
மற்றொரு தலைவி தன் கணவன் கண்ணிற்கு அவ் வாடல் மகள்
அழகினும் தன்னழகு மேம்படும் பொருட்டுக்கண்ணாடியில்
தன்னுருவங்கண்டு தன் அணிகலன்களை அழகுறத் திருத்தினாள்;
பின்னொருத்தி தன் கணவன் தன்னையன்றி அப் பரத்தையை
விரும்பாதிருக்கச் செய்யும் பொருட்டுத் தன் கொங்கைகளில்
சந்தனத்தைப் பூசி உதிர்த்துப் பின்னும் |
|
|
|